பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் ஸால்மியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறியது இஸ்லாமாபாத் யுனைடெட் அணி. 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பெஷாவர் ஸால்மிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:

காலின் முன்ரோ, ரஹ்மானுல்லா குர்பாஸ், ராசி வாண்டர்டசன், ஷதாப் கான் (கேப்டன்), அசாம் கான் (விக்கெட் கீப்பர்), ஆசிஃப் அலி, முபாசிர் கான், ஃபஹீம் அஷ்ரஃப், டாம் கரன், ஹசன் அலி, ருமான் ரயீஸ்.

ஒரு கேப்டன் இப்படி தொந்தியும் தொப்பையுமா இருக்கலாமா..? அசிங்கமா இல்ல..? ரோஹித்தை விளாசிய கபில் தேவ்

பெஷாவர் ஸால்மி அணி:

முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), சயிம் ஆயுப், டாம் கோலர் காட்மோர், ரோவ்மன் பவல், ஜேம்ஸ் நீஷம், தசுன் ஷனாகா, வஹாப் ரியாஸ், சுஃபியான் முகீம், உஸ்மான் காதிர், அர்ஷத் இக்பால்.

முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ஹாரிஸ் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 76 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய முகமது ஹாரிஸ் 21 பந்தில் 40 ரன்களை விளாசினார். பாபர் அசாம் ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நிற்க, மறுமுனையில் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்திலோ அல்லது ரன்னே அடிக்காமலோ மளமளவென ஆட்டமிழந்தனர். 

சயிம் அயூப் (3), டாம் கோலர் காட்மோர்(1), ரோவ்மன் பவல்(0), ஜிம்மி நீஷம் (6), தசுன் ஷனாகா (11), வஹாப் ரியாஸ்(8), உஸ்மான் காதிர்(7) ஆகியோர் மளமளவென ஆட்டமிழக்க, கடைசிவரை களத்தில் நின்ற பாபர் அசாம் 58 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 75 ரன்களை குவித்து தனி நபராய் இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். பாபர் அசாமின் பொறுப்பான அரைசதத்தால் 20 ஓவரில் 156 ரன்கள் அடித்தது பெஷாவர் ஸால்மி அணி. ஹசன் அலி அருமையாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தினார்.

IND vs AUS:எப்பேர்ப்பட்ட பிளேயர் ராகுல்; அப்படிலாம் ஈசியா தூக்கமுடியாது! கேஎல் ராகுலுக்கு கம்பீர் ஆதரவுக்குரல்

157 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 31 பந்தில் 200 ஸ்டிரைக் ரேட்டில் 62 ரன்கள் அடித்தார். வாண்டர்டசன் 29 பந்தில் 42 ரன்களும், ஆசிஃப் அலி அடித்து ஆடி 13 பந்தில் 29 ரன்களும் விளாச, 15வது ஓவரிலேயே இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறியது.