பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனை முல்தான் சுல்தான்ஸ் அணி தான் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முல்தான் சுல்தான்ஸ் அணிதான் முதலிடத்தில் உள்ளது. கராச்சி கிங்ஸ் அணி 2ம் இடத்தில் உள்ளது.

இதுவரை ஆடிய தலா 2 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 4 மற்றும் 5ம் இடங்களில் இருக்கும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் இன்று மோதுகின்றன. கராச்சியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

IND vs AUS: கேஎல் ராகுல் துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னணி..! ஹர்பஜன் சிங் அதிரடி

பெஷாவர் ஸால்மி அணி:

முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), சயிம் அயுப், டாம் கோலர் காட்மோர், ரோவ்மன் பவல், தசுன் ஷனாகா, ஜேம்ஸ் நீஷம், வஹாப் ரியாஸ், உஸ்மான் காதிர், அர்ஷத் இக்பால், சுஃபியான் முகீம்.

IND vs AUS: அடுத்தடுத்த தோல்விகள்.. ஆஸ்திரேலிய அணி செய்த தவறுகளை லிஸ்ட் போட்டு அடித்த மைக்கேல் கிளார்க்

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி:

ஜேசன் ராய், மார்டின் கப்டில், முகமது ஹஃபீஸ், உமர் அக்மல், சர்ஃபராஸ் அகமது (கேப்டன், விக்கெட் கீப்பர்), இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ், அப்துல் பங்கல்ஸாய், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன், நுவான் துசாரா.