Asianet News TamilAsianet News Tamil

Pakistan vs Australia: சதத்தை தவறவிட்ட உஸ்மான் கவாஜா.. ஸ்மித் அரைசதம்! ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா நல்ல பவுலிங்

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் அடித்துள்ளது.
 

pakistan vs australia third test match first day play report
Author
Lahore, First Published Mar 21, 2022, 7:32 PM IST

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லாகூரில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரை 7 ரன்னில் வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி, லபுஷேனை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கினார். 

இதையும் படிங்க - IPL 2022: பயிற்சியில் ஸ்டம்ப்பை உடைத்தெறிந்த நடராஜன்..! வீடியோ

8 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக பேட்டிங் ஆடிய உஸ்மான் கவாஜா அரைசதம் அடிக்க, அவரைத்தொடர்ந்து ஸ்மித்தும் அரைசதம் அடித்தார். ஸ்மித் 59 ரன்களில் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிய உஸ்மான் கவாஜா 91 ரன்னில் ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

இதையும் படிங்க - IPL 2022: தீபக் சாஹருக்கு சரியான மாற்று வீரர் இவர் தான்..! இர்ஃபான் பதான் கருத்து

ஸ்டீவ் ஸ்மித்தை நசீம் ஷாவும், உஸ்மான் கவாஜாவை சஜித் கானும் வீழ்த்தினர். 5ம் வரிசையில் இறங்கிய டிராவிஸ் ஹெட்டை 26 ரன்னில் நசீம் ஷா வீழ்த்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் அடித்துள்ளது. கேமரூன் க்ரீன் 20 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா அபாரமாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios