சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த நடராஜன், பயிற்சியின்போது ஸ்டம்ப்பை உடைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

நடராஜன்:

தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலரான டி.நடராஜன், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிவருகிறார். 2017ம் ஆண்டு பஞ்சாப் அணியில் இடம்பெற்ற நடராஜன், 2018லிருர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவருகிறார்.

டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர்கள், நல்ல வேரியேஷன், அனைத்துவிதமான சூழல்களிலும் சாமர்த்தியமான பவுலிங் என தனது திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளையும் குவித்த நடராஜன், இந்திய அணிக்காகவும் ஆட வாய்ப்பு பெற்றார்.

காயம்:

ஆனால் காயம் காரணமாக அவரால் இந்திய அணியில் நீடிக்க முடியவில்லை. ஐபிஎல்லில் 24 போட்டிகளில் ஆடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் நடராஜன். 15வது சீசனுக்கான ஏலத்திற்கு முன் அவரை விடுவித்த சன்ரைசர்ஸ் அணி, ஏலத்தில் ரூ.4 கோடிக்கு அவரை எடுத்தது. மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க இந்த ஐபிஎல் சீசன் அருமையான வாய்ப்பு. 

ஸ்டம்ப்பை உடைத்த நடராஜன்:

வரும் 26ம் தேதி ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக மிகத்தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் நடராஜன். அந்தவகையில், பயிற்சியின்போது அவர் பந்துவீசியதில் ஸ்டம்ப்பே உடைந்தது. அந்த வீடியோவை சன்ரைசர்ஸ் அணி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது. நடராஜன் பந்துவீசி ஸ்டம்ப்பை உடைத்த அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது.

View post on Instagram