இந்திய அணியில் இருக்கும் அந்த வீரர் மாதிரியான ஒருவர் இல்லாததுதான் பாகிஸ்தானின் மைன்ஸ்! முன்னாள் வீரர் வேதன

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதை போன்று, ஒரு தரமான ஆல்ரவுண்டர் பாகிஸ்தானிடம் இல்லாததுதான், இந்திய அணியை பாகிஸ்தானிடமிருந்து வேறுபடுத்துவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கருத்து கூறியுள்ளார்.
 

pakistan former pacer aaqib javed opines what makes team india difference with pakistan

ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுவதால், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அந்தவகையில், வரும் 28ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆசிய கோப்பையில் 3 முறையாவது இந்தியா - பாகிஸ்தான் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது.

இதையும் படிங்க - டக் அவுட் ஆகுறதுக்கா உனக்கு கோடிகளை கொட்டி கொடுக்குறோம்.? ரோஸ் டெய்லரை பளார்னு அறைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஓனர்

பாகிஸ்தான் அணி பொதுவாக இந்தியாவிற்கெதிரான போட்டி என்றாலே, அழுத்தம் அதிகமாகி, அதனாலேயே நிறைய தவறுகளை செய்து தோல்வியை தழுவிவிடும். ஆனால் இதை மாற்றியமைத்துள்ளது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. அதேபோல் தங்கள் திறமையின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளதாக கேப்டன் பாபர் அசாம் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியும், கடந்த டி20 உலக கோப்பையில் தோல்வியடைந்த அணி கிடையாது. புதிய கேப்டன் ரோஹித் சர்மா, புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என முற்றிலும் புதிய அணியுடனும், அணுகுமுறையுடனும் களமிறங்குகிறது. எனவே ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

ரோஹித் சர்மாவின் தலைமையில் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் என வலுவான பேட்டிங் ஆர்டரும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் என தரமான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டும், ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹல் ஆகியோரும் உள்ளனர். ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய 2 தரமான ஆல்ரவுண்டர்கள் உள்ளனர்.

ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் முழு ஃபிட்னெஸுடன் இல்லை. எனவே அவரால் 4 ஓவர்கள் முழுமையாக பந்துவீச முடியவில்லை. ஆனால் இப்போது முழு ஃபிட்னெஸுடன் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்படுகிறார்.

இதையும் படிங்க - நீங்க தோனியை யூஸ் பண்ண முடியாது.! சிஎஸ்கேவிற்கு செக் வைத்த பிசிசிஐ

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பெரிய வித்தியாசமாக திகழ்கிறார் என்றும், அவரை மாதிரி ஒரு தரமான ஆல்ரவுண்டர் பாகிஸ்தான் அணியில் இல்லாததே அந்த அணியின் மைனஸ் என்றும் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆகிப் ஜாவேத், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான வித்தியாசம் பேட்டிங்கில் அமைந்துள்ளது. இந்திய அணி நல்ல அனுபவமான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. ரோஹித் சர்மா தனி நபராக போட்டியை ஜெயித்து கொடுக்கக்கூடியவர். அவரைப்போல பாகிஸ்தானில் ஃபகர் ஜமான் இருக்கிறார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் தான் பெரிய வித்தியாசம். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். அதனால் அணியின் பேலன்ஸ் வலுவடைகிறது. அவரை  போன்ற ஒரு ஆல்ரவுண்டர் பாகிஸ்தான் அணியில் இல்லாததுதான் அந்த அணியின் பிரச்னை என்று ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios