MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • நீங்க தோனியை யூஸ் பண்ண முடியாது.! சிஎஸ்கேவிற்கு செக் வைத்த பிசிசிஐ

நீங்க தோனியை யூஸ் பண்ண முடியாது.! சிஎஸ்கேவிற்கு செக் வைத்த பிசிசிஐ

வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் அங்கம் வகிக்க வேண்டுமென்றால், இந்திய வீரர்கள் பிசிசிஐ-யுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ கண்டிப்பாக தெரிவித்துவிட்டது. 

2 Min read
Author : karthikeyan V
Published : Aug 13 2022, 06:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போன்று பிக்பேஷ் லீக், கனடா பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேச பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன.
 

27

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போன்று பிக்பேஷ் லீக், கனடா பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேச பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன.

இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் வீரர் புறக்கணிப்பு..! ரிக்கி பாண்டிங் சொல்லும் நியாயமான காரணம்
 

37

இந்திய அணி, உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல் என ஒட்டுமொத்தமாக பிசிசிஐயுடனான அனைத்துவிதமான ஒப்பந்தங்களிலிருந்தும் வெளியேறிய பின்னர் வேண்டுமானால் வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆடலாம். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு ஐபிஎல்லில் ஆடிக்கொண்டிருந்தால் கூட வெளிநாட்டு லீக்குகளில் ஆடமுடியாது. அதுதான் பிசிசிஐயின் விதிமுறை.
 

47

தென்னாப்பிரிக்க டி20 லீக் மற்றும் யுஏஇ டி20 லீக் ஆகிய தொடர்கள் புதிதாக தொடங்கப்படும் நிலையில், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தான் அந்த டி20 லீக்குகளில் பங்குபெறும் அணிகளையும் வாங்கியுள்ளனர்.
 

57

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர்களில் ஆடும் ஜோஹன்னஸ்பர்க் அணியை சிஎஸ்கேவும், கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்ஸும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணியை சன்ரைசர்ஸும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்ஸும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேபிடள்ஸும் வாங்கியுள்ளன.
 

67

எனவே ஐபிஎல்லில் தங்கள் அணிகளில் அங்கம் வகிப்பவர்களை, இந்த தொடர்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள நினைத்தன ஐபிஎல் அணிகள். சிஎஸ்கே கேப்டன் தோனியை தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் ஜோஹன்னஸ்பர்க் அணியின் ஆலோசகராகவோ பயிற்சியாளராகவோ பயன்படுத்த சிஎஸ்கேவும், அதேபோல மற்ற அணிகளும் தங்கள் அணிகளில் இருப்பவர்களை தென்னாப்பிரிக்க டி20 லீக்குகளில் பயன்படுத்திக்கொள்ள நினைத்தன.

இதையும் படிங்க - இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மட்டுமல்ல; ஆசிய கோப்பையையும் இந்த அணி தான் வெல்லும்.! ரிக்கி பாண்டிங் அதிரடி

77

ஆனால் ஐபிஎல்லில் ஆடும் வீரர்களை அந்த லீக்குகளில் பயன்படுத்த முடியாது. இந்திய அணி, உள்நாட்டு அணி, ஐபிஎல் என அனைத்துவிதத்திலும் பிசிசிஐயுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்ட பின்னர் தான் எந்த இந்திய வீரரும் வெளிநாட்டு டி20 லீக்குகளில் ஆடவோ அல்லது அங்கம் வகிக்கவோ முடியும். இல்லையென்றால் கண்டிப்பாக அது முடியாது என்று பிசிசிஐ தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.

About the Author

KV
karthikeyan V
ஐபிஎல்
சிஎஸ்கே
எம். எஸ். தோனி

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?
Recommended image2
ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?
Recommended image3
ஹர்திக், அபிஷேக், திலக் ருத்ரதாண்டவம்.. தெறிக்க விட்ட இந்தியா.. 4 ரன்னில் உலக சாதனை மிஸ்ஸிங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved