MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மட்டுமல்ல; ஆசிய கோப்பையையும் இந்த அணி தான் வெல்லும்.! ரிக்கி பாண்டிங் அதிரடி

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மட்டுமல்ல; ஆசிய கோப்பையையும் இந்த அணி தான் வெல்லும்.! ரிக்கி பாண்டிங் அதிரடி

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் மட்டுமல்லாது, ஆசிய கோப்பையையும் இந்திய அணி தான் வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் கருத்து கூறியுள்ளார். 

2 Min read
Author : karthikeyan V
Published : Aug 13 2022, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுவதால், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அந்தவகையில், வரும் 28ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஆசிய கோப்பையில் 3 முறையாவது இந்தியா - பாகிஸ்தான் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது.

இதையும் படிங்க - இந்திய அணியில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இடம்..! இதுதான் பேட்டிங் ஆர்டர்

36

பாகிஸ்தான் அணி பொதுவாக இந்தியாவிற்கெதிரான போட்டி என்றாலே, அழுத்தம் அதிகமாகி, அதனாலேயே நிறைய தவறுகளை செய்து தோல்வியை தழுவிவிடும். ஆனால் இதை மாற்றியமைத்துள்ளது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. அதேபோல் தங்கள் திறமையின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளதாக கேப்டன் பாபர் அசாம் தெரிவித்திருக்கிறார்.
 

46

இந்திய அணியும், கடந்த டி20 உலக கோப்பையில் தோல்வியடைந்த அணி கிடையாது. புதிய கேப்டன் ரோஹித் சர்மா, புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என முற்றிலும் புதிய அணியுடனும், அணுகுமுறையுடனும் களமிறங்குகிறது. எனவே ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

இதையும் படிங்க - இந்திய அணியில் இடத்தை தக்கவைக்கும் நெருக்கடியில் ஜடேஜா..!

56

இந்நிலையில், ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், ஆசிய கோப்பையில் மட்டுமல்ல; வேறு எந்தவொரு கிரிக்கெட் தொடராக இருந்தாலும், இந்தியாவை தாண்டி யோசிக்க முடியாது. 

66

டி20 உலக கோப்பை வந்தாலே, அதை வெல்ல வாய்ப்புள்ள அணி என்று யோசிக்கும்போது இந்தியா தான் முதலில் நினைவிற்கு வரும். இந்திய அணி அந்தளவிற்கு வலிமை வாய்ந்த அணி. மற்ற அணிகளை விட பலமான அணி இந்திய அணி. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமல்லாது ஆசிய கோப்பையையும் இந்திய அணி தான் வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
MS Dhoni Records: சென்னையின் ஆல்டைம் ஃபேவரைட்.. யாராலும் முறியடிக்க முடியாத தோனியின் IPL சாதனைகள்!
Recommended image2
vaibhav suryavanshi: வெறும் வயிற்றில் சிக்ஸர் மழை! வைபவ் சூர்யவன்ஷியின் 'நோ ஃபுட்' சீக்ரெட்!
Recommended image3
Sanju Samson: இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்! 3 இளம் வீரர்களுக்கு இடம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved