PAK vs NZ: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை..! பாகிஸ்தானை வைத்து நியூசிலாந்து செய்த தரமான சம்பவம்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானை வைத்து தரமான சம்பவத்தை செய்துள்ளது நியூசிலாந்து அணி.
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் டிசம்பர் 26(நேற்று) தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி:
அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது, மிர் ஹம்ஸா.
IPL 2023: சிஎஸ்கே அணியின் கேப்டனாக யார் செயல்படலாம்..? தோனியா ஸ்டோக்ஸா..? கிறிஸ் கெய்ல் அதிரடி
நியூசிலாந்து அணி:
டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), இஷ் சோதி, நீல் வாக்னர், அஜாஸ் படேல்.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் (7) மற்றும் 3ம் வரிசை வீரர் ஷான் மசூத்(3) ஆகிய இருவரும் ஸ்டம்பிங் ஆகி ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இமாம் உல் ஹக் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சௌத் ஷகீல் 22 ரன்களுக்கு அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 5வது விக்கெட்டுக்கு பாபர் அசாமும் சர்ஃபராஸ் அகமதுவும் இணைந்து 196 ரன்களை குவித்தனர். 3 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சர்ஃபராஸ் அகமது 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
அபாரமாக ஆடி சதமடித்த பாபர் அசாம் 161 ரன்களை குவிக்க, அகா சல்மான் அபாரமாக பேட்டிங் ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பாபர் அசாம், அகா சல்மானின் சதங்கள் மற்றும் சர்ஃபராஸ் அகமதுவின் அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 438 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தன. முதல் விக்கெட்டாக அப்துல்லா ஷாஃபிக் (7) அஜாஸ் படேலின் சுழலில் ஸ்டம்பிங் ஆக, 2வது விக்கெட்டாக ஷான் மசூத் (3) பிரேஸ்வெல்லின் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது இதுவே முதல் முறையாகும்.