Asianet News TamilAsianet News Tamil

இந்திய பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட முடியும்.! ரமீஸ் ராஜா கருத்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டையே அழித்துவிட முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
 

pakistan cricket board president ramiz raja opines india pm narendra modi can shut down pakistan cricket
Author
Pakistan, First Published Oct 10, 2021, 1:20 PM IST

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராஜாங்க ரீதியான பிரச்னைகளால், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரில் ஆடுவதை கடந்த 7-8 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டது இந்தியா. அதன்பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்கின்றன.

மற்ற நாட்டு அணிகளும் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்யாமல், ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டு ஆடிவந்தன. அண்மைக்காலமாகத்தான் ஒருசில அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகின்றன. அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கு முன்பாக, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடுவதாக இருந்தது. 

ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய, அதே காரணத்தை காட்டி இங்கிலாந்தும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது.

Read More - முன்னாள் கேப்டன் என்பதற்காக சும்மா டீம்ல எடுத்து வைப்பதுலாம் முட்டாள்தனம்.! பாக்., அணி தேர்வை விளாசிய இன்சமாம்

அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற நிலைக்குழுவில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு 50 சதவிகித நிதி ஐசிசியிடம் இருந்தே வருகிறது. ஐசிசிக்கு 90 சதவிகித நிதி பிசிசிஐயிடம் இருந்து வருகிறது. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நிதி கொடுக்கக்கூடாது என்று இந்திய பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் அழித்துவிடும் என்று ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் காப்பாற்றப்பட, வளர, உள்ளூர் அமைப்புகளிடமிருந்து நிதி வர வேண்டும் என்று ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios