U19 Asia Cup 2023: அசான் அவாய்ஸ் சதம் அடித்து சாதனை – பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா யு19 அதிர்ச்சி தோல்வி!

துபாயில் நடந்து வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா யு19 அணியானது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

Pakistan Beat India in 5th Match of ACC Mens U-19 Asia Cup 2023 at Dubai rsk

ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அண்டர்19 (யு19) ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மூலமாக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1989ஆம் ஆண்டு முதல் முறையாக யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இதில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

டர்பனில் மழை; டாஸ் போடுவதில் சிக்கல் – SA vs IND முதல் டி20 போட்டி மழையால் ரத்தாக வாய்ப்பு!

இதுவரையில் 9 எடிஷன் நடந்துள்ளது. இதில் இந்தியா 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒரேயொரு முறை ஆப்கானிஸ்தான் பட்டம் வென்றது. இந்த நிலையில், 10ஆவது யு19 ஆசிய கோப்பை தொடரானது கடந்த 8 ஆம் தேதி துபாயில் தொடங்கியது. இதில், 8 அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று 4 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன.

 

 

இதில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதும். கடைசியாக 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த தொடரில், பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் குரூப் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஜப்பான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

 இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கொடுத்த இங்கிலாந்து – கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறுமா இந்திய மகளிர் அணி?

கடந்த 8ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் இந்தியா யு19 அணி ஆப்கானிஸ்தான் யு19 அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தியா யு19 மற்றும் பாகிஸ்தான் யு19 அணிகளுக்கு இடையிலான 5ஆவது லீக் போட்டி இன்று துபாயில் நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் யு19 அணியானது முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா யு19 அணியானது முதலில் பேட்டிங் செய்தது.

 

 

இதில், தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் நிதானமாக விளையாடி 81 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன், உதய் சஹாரன் பொறுப்பை உணர்ந்து விளையாடி 98 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசியாக சச்சின் தாஸ் 58 ரன்கள் எடுத்துக் கொடுக்க இந்தியா யு19 அணியானது 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் குவித்தது.

2007 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு முதல் முறையாக டர்பனில் டி20 போட்டியில் விளையாடும் இந்தியா!

பாகிஸ்தான் யு19 அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் முகமது ஜீஷான் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அமீர் ஹாசன், உபைத் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அராஃபட் மின்ஹாஸ் ஒரு விக்கெட் கைப்பற்றினார். பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் யு19 அணியில் தொடக்க வீரர் ஷாஜாய்ப் கான் 63 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

India vs Canada, Hockey: ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

அசான் அவாய்ஸ் மற்றும் கேப்டன் சாத் பைக் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர். இதில் அசான் அவாய்ஸ் 130 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 105 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று, சாத் பைக் 51 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்ஸ் உள்பட 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலமாக பாகிஸ்தான் யு19 அணியானது 47 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios