2007 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு முதல் முறையாக டர்பனில் டி20 போட்டியில் விளையாடும் இந்தியா!
கடந்த 2007 ஆம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா முதல் முறையாக இன்று நடக்கும் முதல் டி20 போட்டியின் மூலமாக டர்பனில் விளையாடுகிறது.
Team India
உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடந்தது. இதில், இந்தியா 4-1 என்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
Team India
முதல் கட்டமாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று டர்பனில் நடக்கிறது. இதற்கு முன்னதாக இந்தியா கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக குரூப் இ பிரிவில் விளையாடியது. இந்தப் போட்டி டர்பனில் நடந்தது. இதில் இந்தியா 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
South Africa vs India
கடந்த 2007ல் மட்டும் இந்தியா டர்பனில் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டை செய்யப்பட்டுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. இதுவரையில் இரு அணிகளும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
South Africa vs India
தென் ஆப்பிரிக்கா 10 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவில் நடந்த 7 டி20 போட்டிகளில் இந்தியா 5ல் வெற்றியும், தென் ஆப்பிரிக்கா 2 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
SA vs IND
டர்பனில் மொத்தமாக 18 போட்டிகள் நடந்துள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 9 போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் என்னவோ 143 ரன்கள் ஆகும். இந்த 18 போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தமாக 162 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் 42 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கின்றனர்.