இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று இந்திய அணி 3-0 என தொடரை வென்றுவிட்டது. எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

ஏற்கனவே தொடரை வென்றுவிட்டதால், இந்த போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மா, ஷமி, ஜடேஜா ஆகிய மூவருக்கும் இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவருக்கு பதிலாக முறையே சஞ்சு சாம்சன், நவ்தீப் சைனி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டை காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. எனவே டிம் சௌதி கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளது. 

Also Read - நியூசிலாந்து அணிக்கு மரண அடி.. இன்றைய போட்டியில் மெயின் தலையே டீம்ல இல்ல.. இந்திய அணிக்கு அடுத்த வெற்றி உறுதி

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுலும் சஞ்சு சாம்சனும் களமிறங்குகின்றனர். சஞ்சு சாம்சன், சுந்தர், சைனி ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால் ரோஹித், ஷமி, ஜடேஜா ஆகிய முக்கியமான வீரர்களை நீக்கிவிட்டு சேர்த்தது எதிர்பார்த்திராத அதிரடி மாற்றம் தான். ஷமியை நீக்கிவிட்டு ஷர்துல் தாகூரை அணியில் வைத்திருப்பது அதிர்ச்சிகரமான முடிவு. 

இந்திய அணி:

கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சாஹல், நவ்தீப் சைனி, பும்ரா. 

நியூசிலாந்து அணியில் வில்லியம்சனுக்கு பதிலாக டேரைல் மிட்செலும், கிராண்ட் ஹோம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டாம் ப்ரூஸும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், காலின் முன்ரோ, ரோஸ் டெய்லர், டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), டாம் ப்ரூஸ், டேரைல் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி(கேப்டன்), குஜ்ஜெலின், பென்னெட்.