உலகக் கோப்பை தொடருக்காக சிஎஸ்கே பயிற்சியாளரை தட்டி தூக்கிய நியூசிலாந்து!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளமிங்கை நியூசிலாந்து அணி பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளது.

New Zealand select Stephen Fleming for a coaching staff ahead of ICC Mens Cricket World Cup 2023

இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, புனே, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டியானது நடக்கிறது.

ஜித்தேஷ் சர்மா, ஆவேஷ் கான் இடம் பெறுவார்களா? இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!

கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை தொடர்களில் இறுதிப் போட்டி வரை சென்ற நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு நியூசிலாந்து அணி தயாராகி வருகிறது. ஐபிஎல் தொடரின் போது காயம் அடைந்த நிலையில், தொடரிலிருந்து வெளியேறிய வில்லியம்சன், தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

கடைசி வரை கேப்டனாக வர முடியாத இந்திய வீரர்கள்? யுவராஜ் சிங், ஜாகீர் கான் கூட கேப்டன் இல்லையா?

இந்த நிலையில், இந்திய மைதானங்கள் குறித்து நன்கு அறிந்த முன்னாள் வீரர்களை நியூசிலாந்து அணி பயிற்சியாளர்களாக ஒப்பந்தம் செய்துள்ளது. அதிலேயும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 14 ஆண்டு காலமாக பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் ஃப்ளமிங்கை நியூசிலாந்து அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும், பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் இயான் பெல், சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக சக்லைன் முஷ்டாக் மற்றும் துணைப் பயிற்சியாளராக கேகேஆர் அணியின் துணைப் பயிற்சியாளராக உள்ள ஜேம்ஸ் ஃபோஸ்டர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி லூக் ரோஞ்சி தற்காலிக தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Ireland vs India 3rd T20: டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios