ஜித்தேஷ் சர்மா, ஆவேஷ் கான் இடம் பெறுவார்களா? இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ireland vs India 3rd T20 match is likely to be affected by rain

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அண் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 2 ரன்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த 2ஆவது டி20 போட்டியில் 33 ரன்களில் வெற்றி பெற்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

கடைசி வரை கேப்டனாக வர முடியாத இந்திய வீரர்கள்? யுவராஜ் சிங், ஜாகீர் கான் கூட கேப்டன் இல்லையா?

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு டப்ளின் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியின் போது மழை குறுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்யும் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரையில் அயர்லாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோற்றதில்லை. அப்படியிருக்கும் நிலையில், இன்றைய போட்டியிலும் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்காக விளையாடும். மேலும், இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு இந்த முறை பிளேயிங் 11ல் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி,சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Ireland vs India 3rd T20: டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுமா?

ஜித்தேஷ் சர்மா, சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் இடம் பெற்று விளையாட உள்ளார். ஆதனால், அந்த தொடருக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் வகையில் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கானுக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்த தொடரில் இதுவரையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆதலால், இந்த கடைசி போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுவரையில் பேட்டிங் ஆடாத வாஷிங்டன் சுந்தருக்கு இந்தப் போட்டியில் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா, விராட் கோலி ஏன் இல்லை? சீக்ரெட்டை உடைத்த அஸ்வின்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios