இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. மவுண்ட் மாங்கனியில் இன்று நடக்கும் கடைசி டி20 போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேவேளையில் கடைசி போட்டியிலாவது வென்று ஒரேயொரு வெற்றியையாவது பெறும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளது. 

3வது மற்றும் 4வது போட்டிகளில் நியூசிலாந்து அணி அருமையாக வென்றிருக்கலாம். ஆனால் இரண்டு போட்டிகளிலுமே கடைசி ஓவரில் படுமோசமாக சொதப்பி இந்திய அணிக்கு வெற்றியை தாரைவார்த்தது. மூன்றாவது கடைசி ஓவரில் வெறும் 9 ரன்களை அடிக்க முடியாமலும் நான்காவது போட்டியில் கடைசி ஓவரில் வெறும் 7 ரன்கள் அடிக்க முடியாமலும் போட்டியை டை மட்டுமே ஆக்கி, சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது. 

சொந்த மண்ணில் இந்திய அணியிடம் முதன்முறையாக டி20 தொடரை இழந்ததுடன், ஒயிட் வாஷ் ஆகும் அபாயத்தில் உள்ளது நியூசிலாந்து. எனவே நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் ஒரேயொரு ஆறுதல் வெற்றியை பெறும் தீவிரத்தில் உள்ளது. 

Also Read - கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்.. தொடக்க ஜோடியில் மீண்டும் மாற்றம்

இந்த போட்டிக்கான அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் தோள்பட்டை காயத்தால் ஆடாத வில்லியம்சன், தனது சொந்த மண்ணில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்குவார். எனவே அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் ஆடிய டேரைல் மிட்செல் இன்றைய போட்டியில் ஆடமாட்டார். அதேபோல ஃபாஸ்ட் பவுலர் பென்னெட்டுக்கு பதிலாக டிக்னெர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

கடைசி டி20 போட்டிக்கான உத்தேச நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), டாம் ப்ரூஸ், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, குஜ்ஜெலின், டிக்னெர்.