இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. மவுண்ட் மாங்கனியில் இன்று நடக்கும் கடைசி டி20 போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

முதல் 3 போட்டிகளில் ஆடிய இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 3 போட்டிகளிலுமே அதே வீரர்களுடன் தான் களமிறங்கியது இந்திய அணி. 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரை வென்றதால், 4வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. 

ரோஹித் சர்மா, ஷமி, ஜடேஜா ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, சஞ்சு சாம்சன், சைனி, சுந்தர் ஆகிய மூவருக்கும் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது.இந்நிலையில், இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் மீண்டும் களம் காண்பார். எனவே கடந்த 4 போட்டிகளிலும் ஆடிய கேஎல் ராகுலுக்கு இந்த போட்டியில் ஓய்வளித்துவிட்டு ரோஹித்துடன் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக இறக்கப்பட வாய்ப்புள்ளது. 

Also Read - சூப்பர் ஓவரில் சட்டு புட்டுனு சோலியை முடித்த ராகுல் - கோலி.. இந்திய அணி அபார வெற்றி

கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, சுந்தர் என இந்த ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது. ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த 4 போட்டிகளிலும் ஆடிய பும்ராவிற்கு இந்த போட்டியில் ஓய்வளித்துவிட்டு, கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த ஷமி இந்த போட்டியில் ஆட வாய்ப்புள்ளது. அதேபோல கடந்த 4 போட்டிகளிலும் ஆடிய சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

கடைசி டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஷமி.