வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-0 என டி20 தொடரை வென்றது.
இந்திய அணியை தொடர்ந்து நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது.
முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையும் படிங்க - ராகுல்லாம் வேலைக்கு ஆகமாட்டார்.. ரோஹித்தின் புதிய ஓபனிங் பார்ட்னர் இவர்தான்
நியூசிலாந்து அணி:
மார்டின் கப்டில், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜேம்ச் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, டிரெண்ட் போல்ட்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
கைல் மேயர்ஸ், ஷமர் ப்ரூக்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), டெவான் தாமஸ் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரோவ்மன் பவல், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெஃபெர்டு, ஒடீன் ஸ்மித், ஹைடன் வால்ஷ், ஒபெட் மெக்காய்.
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்டில் 11 பந்தில் 20 ரன்களும், டெவான் கான்வே 34 பந்தில் 42 ரன்களும் அடித்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் க்ளென் ஃபிலிப்ஸும் டேரைல் மிட்செலும் இணைந்து அடித்து ஆடினர்.
அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஃபிலிப்ஸ் 41 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 76 ரன்களையும், டேரைல் மிட்செல் 20 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 48 ரன்களையும் குவிக்க, 20 ஓவரில் 215 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.
இதையும் படிங்க - இந்திய அணியில் இடத்தை தக்கவைக்கும் நெருக்கடியில் ஜடேஜா..!
216 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேயர்ஸ்(4), பூரன் (1), ஹெட்மயர்(14), ஹோல்டர் (11) என ஒருவர் கூட சரியாக ஆடாததால் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துவந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 125 ரன்கள் மட்டுமே அடித்து 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
2வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-0 என டி20 தொடரை வென்றது.
