ராகுல்லாம் வேலைக்கு ஆகமாட்டார்.. ரோஹித்தின் புதிய ஓபனிங் பார்ட்னர் இவர்தான்
இந்திய அணியில் ரோஹித் சர்மாவுடன் கேஎல் ராகுலை ஓபனிங்கில் இறக்காமல், சூர்யகுமார் யாதவையே இறக்கலாம் என்று டேனிஷ் கனேரியா கருத்து கூறியிருக்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து டி20 உலக கோப்பை அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் இந்த 2 முக்கியமான கோப்பைகளையும் வெல்லும் முனைப்பில் உள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுகின்றனர் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆசிய கோப்பையில் ஆட வாய்ப்பு கிடைக்கும் வீரர்கள், அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால் மட்டுமே டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும். ஏனெனில் அணியில் அந்தளவிற்கு போட்டி கடுமையாக உள்ளது.
இதையும் படிங்க - இந்திய அணியில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இடம்..! இதுதான் பேட்டிங் ஆர்டர்
ராகுலும் கோலியும் ஆடாத போட்டிகளில் ரோஹித்துடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் ஓபனிங்கில் இறக்கிவிடப்பட்டனர். அவர்களும் நன்றாக ஆடினர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடினார்.
இப்போது ராகுலும் கோலியும் அணியில் இணைந்துவிட்டதால், சூர்யகுமார் யாதவ் ஆசிய கோப்பையில் 4ம் வரிசையில் தான் ஆடவேண்டிய சூழல் உள்ளது. ஆனால் ஓபனிங்கிற்கும் போட்டி கடுமையாக இருப்பதால் ராகுல் சிறப்பாக ஆடவேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் இருக்கிறார்.
ராகுல் அணியில் இருந்தாலும் கூட, சூர்யகுமார் யாதவே ஓபனிங்கில் இறங்கலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார்.
இதையும் படிங்க - இந்திய அணியில் இடத்தை தக்கவைக்கும் நெருக்கடியில் ஜடேஜா..!
இதுகுறித்து பேசிய டேனிஷ் கனேரியா, ரோஹித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஓபனிங்கில் தான் இறங்கவேண்டும். ரோஹித்துடன் சூர்யகுமார் யாதவ் ஓபனிங்கில் சிறப்பாக ஆடியிருக்கிறார். கேஎல் ராகுல் அணிக்கு திரும்பினாலும், அவர் பின்வரிசையில் ஆடவேண்டும். ராகுல் எந்த பேட்டிங் ஆர்டரிலும் ஆடக்கூடியவர். எனவே அவர் பின்வரிசையில் இறங்கிக்கொண்டு, சூர்யகுமாரை ஓபனிங்கில் ரோஹித்துடன் ஆடவைக்க வேண்டும் என்று டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார்.