NZ vs AFG: சாண்ட்னர் சுழலில் சுருண்ட ஆப்கானிஸ்தான் 139க்கு ஆல் அவுட் – நம்பர் 1 இடத்தில் நியூசிலாந்து!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 16ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 16ஆவது லீக் போட்டி இன்று சென்னையில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதில், வில் யங் 54 ரன்களும், டாம் லாதம் 68 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 71 ரன்களும் எடுக்கவே நியூசிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது.
உலகக் கோப்பையில் 5ஆவது முறையாக இந்தியா – வங்கதேசம் பலப்பரீட்சை: வெற்றி யாருக்கு?
பின்னர் கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு சொல்லிக் கொள்ளும்படி யாரும் ரன்கள் சேர்க்கவில்லை. தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்னிலும், இப்ராஹிம் ஜத்ரன் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹஷ்மானுல்லா ஷாஹிடி 8 ரன்னிலும், அஸ்மானுல்லா உமர்சாய் 27 ரன்னிலும் இக்ரம் அலிகில் 19 ரன்களிலும் வெளியேறவே ரஹ்மத் ஷா 36 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரஷீத் கான் 8 ரன்களில் வெளியேறினார். இறுதியாக ஆப்கானிஸ்தான் 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலமாக ஆப்கானிஸ்தான் விளையாடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது.
இந்தப் போட்டியில் 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றதன் மூலமாக 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் மற்றும் நெட் ரன் ரேட் அடிப்படையில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.
- Cricket World Cup 2023
- Hashmatullah Shahidi
- ICC Cricket World Cup 2023
- ICC Cricket World Cup 2023 schedule
- Kane Williamson
- Kane Williamson Injury
- Mujeeb Ur Rahman
- NZ vs AFG
- NZ vs AFG Live Match World Cup
- NZ vs AFG Live Streaming
- New Zealand vs Afghanistan Cricket World Cup
- New Zealand vs Afghanistan Live
- Rashid Khan
- Tom Latham
- Watch NZ vs AFG Live
- World Cup 2023
- cricket world cup 2023 news