SA vs NED: 36 ஆண்டுகளுக்குப் பிறகு கபில் தேவ் சாதனையை முறியடித்த நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்!

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 15ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து சரித்திர சாதனை படைத்தது.

Netherlands captain Scott Edwards broke Kapil Dev's record after 36 years in Cricket World Cup 2023 at Dharamsala rsk

இந்தியா நடத்தும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. புதிது புதிதாக வரலாற்று சாதனைகள் உருவாக்கப்படுகிறது. நேற்று தர்மசாலாவில் நடந்த 15ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. மழையின் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக டாஸ் போடப்பட்டது. அதன் பிறகு பெய்த மழையின் காரணமாக போட்டியானது 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 43 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.

IND vs BAN: பவுலிங் பயிற்சி செய்த ரோகித் சர்மா – ஆலோசனை கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

இதில், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 78 ரன்களும், ஆர்யன் தத் 23 ரன்களும், வான் டெர் மெர்வே 29 ரன்களும் எடுத்தனர். அதன் பிறகு பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. இதில், சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக அழுத்தமும், பதற்றமும் தென் ஆப்பிரிக்கா வீரர்களிடையே ஏற்பட்டது.

தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, ஹென்ரிச் கிளாசென் 28 ரன்னிலும், டேவிட் மில்லர் 43 ரன்னிலும், கெரால்டு கோட்ஸீ 22 ரன்னிலும் ஆட்டமிழக்க, கடைசியாக கேசவ் மகாராஜ் 40 ரன்களில் ஆட்டமிழக்கவே தென் அபபிரிக்கா 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

NZ vs AFG: நியூசியில், கேன் வில்லியம்சன் இல்லை – ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

இதன் மூலமாக நெதர்லாந்து முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் 3 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இன்றைய 15ஆவது லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக நெதர்லாந்து, முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த தோல்வியின் மூலமாக ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது.

வங்கதேச அணி இந்தியாவை தோற்கடித்தால் தன்னுடன் மீன் குழம்பு உணவருந்தலாம் – பாகிஸ்தான் நடிகை!

முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளைத் தான் நெதர்லாந்து அணி வீழ்த்தியிருந்தது. மேலும், உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கூட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை டை செய்து, சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது தென் ஆப்பிரிக்கா அணியை தோற்கடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மேலும், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் வெற்றியை நெதர்லாந்து பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி 8ஆவது இடம் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து 3ஆவது இடத்தில் நீடிக்கிறது.

SA vs NED: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்து இந்தியாவை எச்சரித்த நெதர்லாந்து!

இதற்கு முன்னதாக நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் நெதர்லாந்து அணியானது,

2003ல் நமீபியாவை 64 ரன்களில் வீழ்த்தியது

2007ல் ஸ்காட்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

2023ல் தென் ஆப்பிரிக்காவை 38 ரன்களில் வீழ்த்தியுள்ளது.

இந்தப் போட்டியில் நெதர்லாந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ். 7ஆவது வரிசையில் களமிறங்கிய அவர் 69 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலமாக உலகக் கோப்பை வரலாற்றில் 7ஆவது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன் என்ற இந்திய ஜாம்பவான் கபில் தேவ் சாதனையை முறியடித்துள்ளார்.

SA vs NED:வரலாற்றை மாற்றி எழுதிய நெதர்லாந்து – 428 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா இப்போ 207 ரன்களில் சரண்டர்!

கடந்த 1987ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 7ஆவது வரிசையில் களமிறங்கி 58 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios