SA vs NED: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்து இந்தியாவை எச்சரித்த நெதர்லாந்து!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து 38 ரன்களில் வெற்றி பெற்று பெற்றுள்ளது.
இந்தியா நடத்தும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. புதிது புதிதாக வரலாற்று சாதனைகள் உருவாக்கப்படுகிறது. இன்று தர்மசாலாவில் நடந்த 15ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. மழையின் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக டாஸ் போடப்பட்டது. அதன் பிறகு பெய்த மழையின் காரணமாக போட்டியானது 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 43 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.
இதில், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 78 ரன்களும், ஆர்யன் தத் 23 ரன்களும், வான் டெர் மெர்வே 29 ரன்களும் எடுத்தனர். அதன் பிறகு பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. இதில், சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக அழுத்தமும், பதற்றமும் தென் ஆப்பிரிக்கா வீரர்களிடையே ஏற்பட்டது.
தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, ஹென்ரிச் கிளாசென் 28 ரன்னிலும், டேவிட் மில்லர் 43 ரன்னிலும், கெரால்டு கோட்ஸீ 22 ரன்னிலும் ஆட்டமிழக்க, கடைசியாக கேசவ் மகாராஜ் 40 ரன்களில் ஆட்டமிழக்கவே தென் அபபிரிக்கா 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பையில் நெதர்லாந்து வரலாற்று சாதனை!
இதன் மூலமாக நெதர்லாந்து முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் 3 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இன்றைய 15ஆவது லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக நெதர்லாந்து, முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த தோல்வியின் மூலமாக ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது.
முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்த் அணிகளைத் தான் நெதர்லாந்து அணி வீழ்த்தியிருந்தது. மேலும், உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கூட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை டை செய்து, சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது தென் ஆப்பிரிக்கா அணியை தோற்கடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
Pakistan vs Australia: பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்களுக்கு வைரஸ் தொற்று – பயிற்சி ரத்து!
மேலும், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் வெற்றியை நெதர்லாந்து பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி 8ஆவது இடம் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து 3ஆவது இடத்தில் நீடிக்கிறது.
இதற்கு முன்னதாக நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் நெதர்லாந்து அணியானது,
2003ல் நமீபியாவை 64 ரன்களில் வீழ்த்தியது
2007ல் ஸ்காட்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
2023ல் தென் ஆப்பிரிக்காவை 38 ரன்களில் வீழ்த்தியுள்ளது.
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதன் மூலமாக இந்திய அணிக்கு நெதர்லாந்து எச்சரிக்கை கொடுத்துள்ளது. வரும் நவம்பர் 12 ஆம் தேதி பெங்களூருவில் நெதர்லாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இன்று நடந்த போட்டியின் மூலமாக நெதர்லாந்து தன்னை ஒரு பலம் வாய்ந்த அணியாக காட்டி வருகிறது.
- Aryan Dutt
- CWC 2023
- ICC Cricket World Cup 2023 schedule
- ICC cricket world cup 2023
- India vs Pakistan cricket world cup
- Kagiso Rabada
- Roelof van der Merwe
- SA vs NED live
- SA vs NED live match world cup
- SA vs NED live streaming
- Scott Edwards
- South Africa vs Netherlands World Cup 15th Match
- South Africa vs Netherlands live
- South Africa vs Netherlands world cup 2023
- Teja Nidamanuru
- Temba Bavuma
- World Cup 2023 fixtures
- World cup cricket live scores
- cricket world cup 2023 news
- cricket world cup tickets
- watch SA vs NED live
- world cup SA vs NED venue
- IND vs NED
- India vs Netherlands
- Rohit Sharma