Asianet News TamilAsianet News Tamil

கடைசில காட்டு காட்டுன்னு காட்டிய நியூசிலாந்து – கடைசி 10 ஓவர்களில் 103 ரன்கள் – மொத்தமாக 288 ரன்கள் குவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது.

New Zealand Scored 288 Runs against Afghanistan in 16th World Cup Match At Chennai rsk
Author
First Published Oct 18, 2023, 6:46 PM IST

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 16ஆவது லீக் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் நியூசிலாந்து பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர் டெவான் கான்வே 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ரச்சின் ரவீந்திரா 32 ரன்களில் கிளீன் போல்டானார். மற்றொரு தொடக்க வீரர் வில் யங் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

SA vs NED: 36 ஆண்டுகளுக்குப் பிறகு கபில் தேவ் சாதனையை முறியடித்த நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்!

இவரைத் தொடர்ந்து டேரில் மிட்செல் 1 ரன்களில் வெளியேறினார். கேப்டன் டாம் லாதம் 74 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கிளென் பிலிப்ஸ் 80 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக மார்க் சேப்மேன் மற்றும் மிட்செல் சாண்டனர் இருவரும் கடைசியில் ஓரளவு ரன் சேர்க்க இறுதியாக நியூசிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது.

IND vs BAN: பவுலிங் பயிற்சி செய்த ரோகித் சர்மா – ஆலோசனை கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

ஒரு கட்டத்தில் 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்திருந்த நியூசிலாந்து கடைசியில் 10 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய 103 ரன்கள் குவித்து மொத்தமாக 288 ரன்கள் குவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டும், அஷ்மதுல்லா உமர்சாய் 2 விக்கெட்டும், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் இருவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். ஆனால், நியூசிலாந்து அணி வீரர்கள் கொடுத்த எளிமையான கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கோட்டைவிட்டனர்.

NZ vs AFG: நியூசியில், கேன் வில்லியம்சன் இல்லை – ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

Follow Us:
Download App:
  • android
  • ios