10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நேபாள்: முதல் முறையாக உலகக் கோப்பையில் ஓமன்!
டி20 உலகக் கோப்பை ஆசிய தகுதிச் சுற்று இறுதிப் போட்டியின் மூலமாக நேபாள் மற்றும் ஓமன் அணிகள் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி சாம்பியனானது. இதையடுத்து 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கிறது.
இந்திய பவுலர்களுக்கு ஐசிசி வித்தியாசமான பந்துகளை வழங்குகிறது – ஹசன் ராசா குற்றச்சாட்டு!
இந்த தொடரில் மொத்தமாக 20 அணிகள் இடம் பெறும். இதில் 55 போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த 20 அணிகளும் 5 அணிகள் கொண்ட 4 குழுக்களாக பிரிக்கப்படும். இதில், ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த கட்டத்தில், தகுதி பெறும் அணிகள் நான்கு பேர் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும்; ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் நாக் அவுட் நிலைக்குத் தகுதி பெறும், இதில் இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடத்தப்படும்.
இந்த உலகக் கோப்பை தொடருக்கு இதுவரை 18 அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதில் கடைசி 2 அணிகளாக நேபாள் மற்றும் ஓமன் ஆகிய இரு அணிகளும் தகுதி பெற்றுள்ளன. வரும் நவம்பர் 22 முதல் 30 வரை நமீபியாவில் நடைபெறும் ஆப்பிரிக்கா தகுதிச் சுற்றிலிருந்து கடைசி இரண்டு இடங்கள் தீர்மானிக்கப்படும்.
மாற்றங்களுடன் களமிறங்கும் நெதர்லாந்து - டாஸ் வென்று பேட்டிங்!
இதுவரையில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினி, கனடா, நேபாள் மற்றும் ஓமன் என்று 18 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்த நிலையில் தான் ICC ஆண்கள் T20I உலகக் கோப்பை ஆசிய இறுதிப் போட்டி 2023 நேபாளில் நடந்து வருகிறது. கடந்த 30 ஆம் ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரானது வரும் நவம்பர் 5ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த ஆசிய தகுதிச் சுற்று போட்டியில் இடம் பெற்ற சிங்கப்பூர், நேபாள், பக்ரைன், ஐக்கிய அமீரகம், மலேசியா, ஹாங்காங், குவைத், ஓமன் என்று 8 அணிகள் இடம் பெற்று விளையாடின. இதில், இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியின் மூலமாக ஓமன் அணியும், 2ஆவது அரையிறுதிப் போட்டியின் மூலமாக நேபாள் அணியும் தகுதி பெற்றுள்ளன.
இந்த இரு அணிகளுக்கான இறுதிப் போட்டி வரும் 5ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து ஆப்பிரிக்கா தகுதிச் சுற்று போட்டிகள் மூலமாக 2 அணிகள் இடம் பெற உள்ளன. இந்தப் போட்டி வரும் 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் நடக்கிறது. 2024 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை போட்டிகள் ஆன்டிகுவா, பார்புடா, பார்படாஸ், டொமினிகா, கயானா, செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஐக்கிய அமெரிக்கா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.