இந்திய பவுலர்களுக்கு ஐசிசி வித்தியாசமான பந்துகளை வழங்குகிறது – ஹசன் ராசா குற்றச்சாட்டு!
இந்திய பவுலர்களுக்கு ஐசிசி வித்தியாசமான பந்துகளை அளிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராசா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா நடத்தும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் வங்கதேச அணி முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது. இதே போன்று இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மாற்றங்களுடன் களமிறங்கும் நெதர்லாந்து - டாஸ் வென்று பேட்டிங்!
நேற்று நடந்த போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராஜா, இந்திய பவுலர்களுக்கு ஐசிசி வித்தியாசமான பந்துகளை வழங்குவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய அணிக்கு மட்டும் போட்டியின் போது தனிப்பட்ட பந்துகளை கொடுப்பதாகவும் அதனால் தான் இந்திய பவுல்ரகள் பந்தை ஸ்விங் மற்றும் சீம் செய்து விக்கெட்டுகளை கைப்பற்றி வருகின்றனர் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் போன்ற பந்து வீச்சாளர்கள் ஆலன் டொனால்டு, மக்காயா நிடினி போன்ற பந்து வீச்சாளர்களை போல பந்து வீசுகிறார்கள். மற்ற அணிகளுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வது வேறு மாதிரியாக உள்ளது. பந்து சீம் மற்றும் ஸ்விங் ஆனது. ஒரு பக்கம் பளபளவென்று இருந்தால் பந்து ஸ்விங் ஆக உதவும்.
முதல் இன்னிங்ஸில் ஒரு பந்தும், 2ஆவது இன்னிங்ஸில் ஒரு பந்தும் பயன்படுத்தப்பட்டது. ஐசிசி, பிசிசிஐ மற்றும் மூன்றாவது நடுவர்கள் பந்தை எப்படி கொடுக்கிறார்கள் என்பதை உரிய பரிசோதனை செய்ய வேண்டும். 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பவுலர்கள் பயன்படுத்தும் பந்தில் எக்ஸ்டிரா லேயர் அல்லது கோட்டிங் இருக்கிறது. இதன் மூலமாக பந்து ஸ்விங் மற்றும் சீம் ஆகிறது. இதைக் கொண்டு இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றுகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்