இந்தியாவில் 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்து வரும் நிலையில், ரிஷப் பண்ட் மற்றும் அக்‌ஷர் படேல் இருவரும் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், தான் இந்திய அணி வீரர்கள் அக்‌ஷர் படேல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.

பிரச்சனையா? எனக்கா? ஷார்ட் பால் கேள்வியால் கோபமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் அதன் பிறகு நடந்த எந்த தொடரிலும் இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடரிலும் பங்கேற்கவில்லை. அதன் பிறகு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து கடுமையான உடற்பயிற்சி மேகொண்டு வந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. விரைவில் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India vs Sri Lanka: இளம் ரசிகருக்கு தனது ஷூவை பரிசாக அளித்த ரோகித் சர்மா – வைரலாகும் வீடியோ!

இதே போன்று ஆசிய கோப்பை போட்டியின் போது கையில் காயமடைந்த அக்‌ஷர் படேல் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால், காயம் குணமடையாத நிலையில், இந்திய அணியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றார். இதையடுத்து சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் குஜராத் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

India vs Sri Lanka: ஒரே ஆண்டில் 3ஆவது முறை 73, 50, 55 ஸ்கோர் - இலங்கையை துவம்சம் செய்யும் இந்தியா!

Scroll to load tweet…

இந்த நிலையில் தான் இருவரும் வெள்ளை நிற வேஷ்டி, சட்டை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் மறுபடி மேல் சென்று ரிஷப் பண்ட் கழுத்தில் ருத்ராக்‌ஷ மாலை அணிந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அணியில் இல்லை என்றாலும் ரிஷப் பண்ட் தொடர்ந்து உலகக் கோப்பை போட்டிகளை வீட்டிலிருந்தே பார்த்து வருகிறார். தான் பார்க்கும் போட்டிகளை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை குவித்து சச்சின் சாதனையை முறியடித்த கோலி!

Scroll to load tweet…