India vs Sri Lanka: ஒரே ஆண்டில் 3ஆவது முறை 73, 50, 55 ஸ்கோர் - இலங்கையை துவம்சம் செய்யும் இந்தியா!

இந்தியாவிற்கு எதிரான 33ஆவது லீக் போட்டியில் இலங்கை 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததன் மூலமாக 3ஆவது முறையாக குறைவான ஸ்கோர் எடுத்துள்ளது.

Sri Lankan team has taken a Lowest score against India in ODI Cricket for the 3rd time rsk

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் தில்ஷன் மதுஷங்கா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

India vs Sri Lanka: 86 வயதில் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியை பார்க்க வந்த தாத்தா!

பின்னர் கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் பதும் நிசாங்கா முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அந்த ஓவரில் பும்ரா 2 வைடுகள் வீசினார். பின்னர் சிராஜ் தனது முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே கோல்டன் டக் முறையில் சிராஜ் பந்தில் எல்பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை குவித்து சச்சின் சாதனையை முறியடித்த கோலி!

அதே ஓவரின் 5ஆவது பந்தில் சதீரா சமரவிக்ரமா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் மறுபடியும், சிராஜ் வீசிய 3.1 ஆவது ஓவரில் கேப்டன் குசால் மெண்டிஸ் ஒரு ரன்னில் கிளீன் போல்டானார். அப்போது இலங்கை அணி 3.1 ஓவரில் 3 ரன்னுக்கு 4 விக்கெட்டுகள் எடுத்திருந்தது.

அடுத்து வந்த சரித் அசலங்கா 24 பந்துகளில் 1 ரன் எடுத்து ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அடுத்த பந்தில் துஷாந்த் ஹேமந்தா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த துஷ்மந்தா சமீரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடைசியாக ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த கசுன் ரஜீதா 14 ரன்களில் வெளியேறினார். தில்ஷன் மதுஷங்கா 5 ரன்களில் ஆட்டமிழக்க, மகீஷ் தீக்‌ஷனா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பிள்ளையார் சுழி போட்ட பும்ரா, சிராஜ் – பக்காவா முடித்து கொடுத்து சாதனை படைத்த முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது!

இறுதியாக இலங்கை 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக மிகவும் குறைவான ஸ்கோர் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை இன்றைய போட்டியின் மூலமாக படைத்துள்ளது.

அதே போன்று ஒரே ஆண்டில் ஒரு அணிக்கு எதிராக 3ஆவது முறையாக ஒரு நாள் போட்டியில் குறைவான ஸ்கோரை இலங்கை எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதற்கும் முன்னதாக 73 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக குறைவான ஸ்கோர் எடுத்து முத்திரை பதித்த இலங்கை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios