தினேஷ் கார்த்திக், சுனில் நரைனை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனையில் நம்பர் 1 இடம் பிடித்த ரோகித் சர்மா!

அதிக முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்தவர்களின் பட்டியலில் சுனில் நரைன், தினேஷ் கார்த்திக் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
 

Mumbai Indians Skipper Rohit Sharma dismissed for duck in 16th Time in his IPL history

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 49ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி கேமரூன் க்ரீன் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கவில்லை.

தனிப்பட்ட காரணத்திற்காக தென் ஆப்பிரிக்கா சென்ற அன்ரிக் நோர்க்யா - டெல்லிக்கு வந்த புதிய சிக்கல்!

முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் இஷான் கிஷான் முதல் பவுண்டரியை அடித்து ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 பவுண்டரி அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். 96 சிக்ஸர்கள் வரையில் அடித்துள்ளார். 2ஆவது ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார். இதில், கேமரூன் க்ரீன் கிளீன் போல்டானார். அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினார்.

கேஎல் ராகுல் விலகல் - WTC Final ரேஸில் இடம் பெற்ற ஹர்திக் பாண்டியா?

இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. மீண்டும் தீபக் சாஹர் பந்து வீச வந்தார். அந்த ஓவரில், 2ஆவது பந்தில் இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். அவர் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதன் பிறகு நேஹல் வதேரா களமிறங்கினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா இறங்கி இறங்கி விளையாடுவதைப் பார்த்து தோனி ஹெல்மெட் கேட்டு வாங்கி அணிந்து கொண்டார். அவர் ஹெல்மெட் அணிந்ததன் அடுத்த பந்திலேயே ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். வெறும் 3 பந்துகள் மட்டுமே விளையாடிய ரோகித் சர்மா டக் அவுட் முறையில் வெளியேறினார்.

ஆபத்தில் உதவாத டெல்லி போலீஸ்: மண்டைல உரைக்கிற மாதிரி பதிலடி கொடுத்த KKR கேப்டன் நிதிஷ் ராணாவின் மனைவி!

இதன் மூலமாக அதிக முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்தவர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இதுவரையில் 16 முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார். இதற்கு முன்னதாக தனது 200ஆவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடி டக் அவுட் முறையில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனி 10 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 184 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்துள்ளார்.

6ஆவது முறையாக வெற்றி பெறுமா மும்பை? எல்லாமே சிஎஸ்கேவுக்கு பாதகம் தான்!

இந்த சீசனில் ரோகித் சர்மா 1, 21, 65, 20, 28, 44, 2, 3, 0, 0 என்று வரிசையாக சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். வரும் 9 ஆம் தேதி மும்பையில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. அதன் பிறகு 12 ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ், 16ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், 21 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. லக்னோ போட்டியைத் தவிர மற்ற போட்டிகள் அனைத்து மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

CSK vs MI; மகுடம் சூடுமா சிஎஸ்கே; இன்று நடக்கும் போட்டியில் இடம் பெறுவது யாரெல்லாம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios