கேஎல் ராகுல் விலகல் - WTC Final ரேஸில் இடம் பெற்ற ஹர்திக் பாண்டியா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக இந்திய அணியில் இடம் பெறுவதில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

IND vs AUS Test; Hardik Pandya May Entered into WTC Final 2023?

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு வலது காலின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகினார். அதோடு, வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்க உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்தும் கேஎல் ராகுல் விலகியுள்ளார்.

ஆபத்தில் உதவாத டெல்லி போலீஸ்: மண்டைல உரைக்கிற மாதிரி பதிலடி கொடுத்த KKR கேப்டன் நிதிஷ் ராணாவின் மனைவி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த கேஎல் ராகுல் தற்போது விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களின் பட்டியலில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், சர்பராஸ் கான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது பெயர் அடிபடுகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபியில் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் இருந்தார். ஆனால், அவர் பேட்டிங்கில் பெரிதாக ஒன்றும் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார்.

6ஆவது முறையாக வெற்றி பெறுமா மும்பை? எல்லாமே சிஎஸ்கேவுக்கு பாதகம் தான்!

ஆதலால், இஷான் கிஷான் இடம் பெறுவதற்கு வாய்ப்பு குறைவு. எனினும் இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் குறைவாக உள்ள நிலையில், அதன் காரணமாக வேண்டுமென்றால் இஷான் கிஷான் இந்திய டெஸ்ட் அணியில் ராகுலுக்குப் பதிலாக இடம் பெற வாய்ப்பு உண்டு. இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இடம் பெறவும் வாய்ப்பிருக்கிறது. மிடில் ஆர்டரில் விளையாட இந்திய அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டர் தேவை என்பதால், அவர் இடம் பெறவும் வாய்ப்பிருக்கிறது.

CSK vs MI; மகுடம் சூடுமா சிஎஸ்கே; இன்று நடக்கும் போட்டியில் இடம் பெறுவது யாரெல்லாம் தெரியுமா?

உமேஷ் யாதவ்விற்கும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் இடம் பெறுவதும் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் ஹர்திக் பாண்டியாவும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. ஆதலால், அவர் இடம் பெறுவது என்பது சந்தேகம் தான். இந்தியா வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக அணியில் இடம் பெற்று சூர்யகுமார் யாதவ் விளையாடினார். ஆனால், அவர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் கூட, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய அனுபவம் இருக்கிறது. ஆனால், இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் இல்லாத நிலையில் அவர் இடம் பெறுவது என்பது சந்தேகம் தான்.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம் பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் பெரிதாக ஒன்றும் ரன்கள் அடிக்காத நிலையில், அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவது என்பது கேள்விக்குறிதான். ஆனால், ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக 3 சதங்கள் அடித்துள்ளார். ஆதலால், அவர் இடம் பெறவும் 30 சதவிகித வாய்ப்புகள் உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios