CSK vs MI; மகுடம் சூடுமா சிஎஸ்கே; இன்று நடக்கும் போட்டியில் இடம் பெறுவது யாரெல்லாம் தெரியுமா?

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 49ஆவது ஐபிஎல் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
 

Playing 11 for CSK vs MI Today 49th IPL Match at Chepauk Stadium

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதுவரையில் சென்னைக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் இந்த சீசனில் மும்பைக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி வாகை சூடியுள்ளது. இதுவரையில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.

லக்னோவிற்கு எதிராக கடைசியாக நடந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னைக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடன் இன்று சென்னையை எதிர்கொள்கிறது. இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதிய 35 போட்டிகளில் 20 முறை மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது.

அதிகபட்சமாக சென்னை அடித்த 218 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டி வெற்றி பெற்றிருக்கிறது. குறைந்தபட்சமாக சென்னை அணி 79 ரன்களும், மும்பை இந்தியன்ஸ் 136 ரன்களும் எடுத்துள்ளன. இதுவரையில் சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன. இதில் முதல் 2 போட்டிகளில் சென்னை அணியும், கடைசியாக நடந்த 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் தான் வெற்றி பெற்றுள்ளது.

இதுவரையில் சென்னையில் நடந்த 60 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 17 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த சீசனில் நடந்த 4 போட்டிகளில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. அதோடு, முதலில் பேட்டிங் செய்த அணி 2 முறையும், 2ஆவது பேட்டிங் ஆடிய அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஆகையால், இன்று நடக்கும் போட்டியில் கூட மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச 11:

டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மகீஷ் தீக்‌ஷனா, தீபக் சகார், மதீஷா பதீரனா, துஷார் தேஷ்பாண்டே.


மும்பை இந்தியன்ஸ் உத்தேச 11: 

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹல் வதேரா, குமார் கார்த்திகேயா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், அர்ஷாத் கான்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios