தன்னைப் பற்றி தவறான செய்தி வெளியிட்டதற்கு வெட்கப்பட வேண்டும்: மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர்!
உண்மைத் தன்மை அறியாமல் தன்னைப் பற்றி தவறான செய்தி வெளியிட்டதற்கு வெட்கப்பட வேண்டும், இது பைத்தியக்காரத்தனம் என்று மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் டுவிட்டரில் வருத்தமாக பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தவறான செய்தி வெளியிட்ட ரிப்போர்டர் வெட்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒன்றைப் பற்றி எதுவும் தெரியாமல் எப்படி ஒரு கட்டுரை தயார் செய்து வெளியிடுகிறார்கள்?
IPL 2023: இத்தனை சாதனைகளை ஆர்சிபி படைத்தும் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் இருப்பது ஏன்?
இது முழுக்க முழுக்க பைத்தியக்காரத்தனம். என்னைப் பற்றி தவறான செய்தியை வெளியிட்டவர்கள் உண்மையில் வெட்கப்பட வேண்டும், ஏற்கனவே பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் போது தனது சொந்த ஆதாயத்துக்காக இவ்வாறு செய்தி வெளியிடுகிறீர்கள். உண்மையில் உங்களைப் போன்றவர்கள் தான் பிரச்சனையே என்று வருத்தமாக பதிவிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்த ஜோஃப்ரா ஆர்ச்சரை கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த ஆண்டிலும் அதே தொகைக்கு அவரை தக்க வைத்தது. ஆனால், இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஆர்ச்சர் 33 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால், விக்கெட் கைப்பற்றவில்லை.
இதையடுத்து நடந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் 6ஆவது போட்டியில் 4 ஓவர்கள் வீசி 42 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார். கடந்த ஓராண்டு காலமாக முழங்கை பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் ஆர்ச்சரால் சரிவர பந்து வீச முடியவில்லை. இது அணியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தவே காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் ஆர்ச்சர் தொடரிலிருந்து வெளியேறி அறுவை சிகிச்சைக்காக பெல்ஜியம் செல்ல இருக்கிறார் என்று செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிடப்பட்டது.
IPL 2023: ஃபர்ஸ்ட் ஆஃப் ஓவர்: இப்போ வரைக்கும் இது மாதிரி தான் தெரியுது!
இதையடுத்து ஒவ்வொரு செய்தி நிறுவனம் ஜோஃப்ரா ஆர்ச்சர் குறித்து செய்தி வெளியிடத் தொடங்கின. இதன் காரணமாக மன வேதனை அடைந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது டுவிட்டர் வாயிலாக வேதனை தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியிருந்தார். அதன் பிறகு தான் இவ்வாறு செய்தி வெளியாகத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.