IPL 2023: மும்பை இந்தியன்ஸ் - கேகேஆர் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
டெல்லி கேபிடள்ஸ் அணி ஆடிய 5 போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சிஎஸ்கே - கேகேஆர் ஆகிய அணிகள் வெற்றி தோல்விகளை கலந்து பெற்றுவருகின்றன. முதலிரண்டு போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 3வது போட்டியில் ஜெயித்தது.
நாளை மும்பை வான்கடேவில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கேகேஆர் அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ், வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும், கடந்த போட்டியில் தோற்ற கேகேஆர் அணி வெற்றி பெறும் முனைப்பிலும் களமிறங்குகின்றன.
இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரைலீ மெரிடித்துக்கு பதிலாக ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆடுவார்.
உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நெஹல் வதேரா, ரித்திக் ஷோகீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
IPL 2023: டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி..! வார்னர் முதலிடம்
உத்தேச கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ், நாராயண் ஜெகதீசன், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், சுயாஷ் ஷர்மா, லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி.