IPL 2023: டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி..! வார்னர் முதலிடம்
டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தை கிறிஸ் கெய்லுடன் பகிர்ந்துள்ளார் விராட் கோலி. டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார்.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில் ஐபிஎல்லிலும் சாதனைகளை படைத்துவருகிறார்.
ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி - டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டுமே பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 34 பந்தில் கோலி 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டுப்ளெசிஸ்(22), லோம்ரார்(26), மேக்ஸ்வெல்(24), தினேஷ் கார்த்திக்(0) என யாருமே சோபிக்காததால் 20 ஓவரில் 174 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி. 175 ரன்கள் என்ற இலக்கை டெல்லி கேபிடள்ஸ் அணி விரட்டிவருகிறது.
IPL 2023: தொடர் தோல்விகளிலிருந்து மீளுமா பஞ்சாப் கிங்ஸ்..? LSG vs PBKS அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
இந்த போட்டியில் விராட் கோலி அடித்தது ஐபிஎல்லில் அவரது 47வது அரைசதம். டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 88வது அரைசதம். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை சமன் செய்துள்ளார் விராட் கோலி. 88 அரைசதங்களுடன் 2ம் இடத்தை கெய்லுடன் பகிர்ந்துள்ளார் கோலி. முதலிடத்தில் 96 அரைசதங்களுடன் டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார்.