Asianet News TamilAsianet News Tamil

IPL 2023:எவ்வளவு எளிய இலக்கு கொடுத்தாலும் அடிக்கமாட்டோம்! அடம்பிடித்து 5வது போட்டியிலும் தோற்ற DC.! RCB வெற்றி

ஐபிஎல் 16வது சீசனில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 175 ரன்கள் என்ற இலக்கை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அடிக்க முடியாமல் இந்த சீசனில் தொடர்ச்சியாக 5வது தோல்வியை அடைந்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. 
 

rcb beat delhi capitals by 23 runs in ipl 2023
Author
First Published Apr 15, 2023, 8:12 PM IST | Last Updated Apr 15, 2023, 8:12 PM IST

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 

டெல்லி கேபிடள்ஸ் அணி தான் இந்த சீசனில் படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. முதல் 4 போட்டிகளிலும் தோற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இன்று ஆர்சிபியை எதிர்கொண்டது. 

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், யஷ் துல், மனீஷ் பாண்டே, அக்ஸர் படேல், அமான் கான், லலித் யாதவ், அபிஷேக் போரெல், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான். 

IPL 2023: டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி..! வார்னர் முதலிடம்

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசர்ங்கா, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், வைன் பார்னெல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டுமே பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். டுப்ளெசிஸ் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடித்து ஆடிய மஹிபால் லோம்ரார் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 5ம் வரிசையில் இறக்கிவிடப்பட்ட ஹர்ஷல் படேலை 6 ரன்களுக்கு அக்ஸர் படேல் வீழ்த்த, அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல் (24) மற்றும் தினேஷ் கார்த்திக் (0) ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் குல்தீப் யாதவ்.

ஷபாஸ் அகமது 12 பந்தில் 22 ரன்கள் அடித்தார். இம்பேக்ட் பிளேயராக இறக்கிவிடப்பட்ட அனுஜ் ராவத் 22 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடிக்க, 20 ஓவரில் 174 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.

IPL 2023: LSG அணியில் ஆடியிருக்க வேண்டியவன் நான்..! அவருக்காகத்தான் GT அணிக்கு ஓகே சொன்னேன் - ஹர்திக் பாண்டியா

175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழந்தனர். பிரித்வி ஷா(0), மிட்செல் மார்ஷ்(0), யஷ் துல்(1), டேவிட் வார்னர்(19) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். தனி ஒருவனாக நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த மனீஷ் பாண்டேவும் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அக்ஸர் படேல்(21), நோர்க்யா(23) ஆகியோர் ஓரளவிற்கு ஆடியும் டெல்லி அணியால் 20 ஓவரில் 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

23 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. ஆர்சிபி அணியில் அறிமுகமான விஜய்குமார் வைஷாக் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 175 ரன்கள் என்பது எளிய இலக்கு. ஆனால் அதைக்கூட அடிக்கமுடியாமல் டெல்லி கேபிடள்ஸ் அணி தோல்வியை தழுவியது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios