Asianet News TamilAsianet News Tamil

மகளுடன் புத்தாண்டை கொண்டாடிய எம் எஸ் தோனி: வைரலாகும் வீடியோ!

எம் எஸ் தோனி தனது மகள் ஜிவாவுடன் புத்தாண்டு கொண்டாடிய வீடியோவை சாக்‌ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

MS Dhoni New year Celebration goes viral in social media
Author
First Published Jan 1, 2023, 11:41 AM IST

ராஞ்சியில் கடந்த 1981 ஆம் ஆண்டு பிறந்த மகேந்திர சிங் தோனி, உள்ளூர் அணியான பீகார் அணியில் இடம் பெற்று கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை விளையாடினார். இதில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். இதே போன்று கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். அடுத்த ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார்.

அழகான 2022 ஆம் ஆண்டு நினைவுகளுக்கு நன்றி - ஷிகர் தவான்!

ஆரம்பம் முதலே 11 கொண்ட குழுவில் ஒருவராக திகழ்ந்த எம் எஸ் தோனி, தனது பேட்டிங் திறமையால் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பை பெற்றார். மேலும், கடந்த 2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பையை வென்றார். 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். 2013 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றார். தோனியின் கேப்டன்ஸியில் இந்திய அணி 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பையையும் வென்றது. ஜார்க்கண்ட் அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஐபிஎல் சீசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்?

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணிக்கு கேப்டனாகவும், 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தான் தோனியின் கடைசி ஒரு நாள் போட்டி. இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டி20 போட்டி தான் தோனிக்கு கடைசி டி20 போட்டி. கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி தான் தோனியின் கடைசி டெஸ்ட் போட்டி. கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி டெஸ்ட் போட்டியிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார்.

2022 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்: பிசிசிஐ ரிப்போர்ட்!

இந்த நிலையில், எம் எஸ் தோனி குடும்பத்தோடு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வானம் முழுவதும் வண்ண வண்ண நட்சத்திரங்களால் ஜொலிக்கிறது. இந்த வீடியோவை சாக்‌ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios