தோனி தனது பண்ணை வீட்டில் வளர்த்து வரும் குதிரைக்கு உணவு கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மறக்க முடியாத வகையில் நாடே கொண்டாடும் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு வடிவங்களில் அழியாத முத்திரை பதித்துள்ளார். இந்திய அணிக்கு 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2013 ஆசிய கோப்பை, 2010 மற்றும் 2016 ஆசிய கோப்பையை வென்று கொடுத்து நாடே போற்றும் ஒரு கேப்டனாக திகழ்ந்தார்.
கிரிக்கெட் திறமைக்கு அப்பாற்பட்டு, தோனி விலங்குகள் மீது அதிக பாசம் கொண்டுள்ளார். அதற்கு உதாரணமாக ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோனி ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது அன்பான குதிரை சேட்டாக் மற்றும் போனிக்கு உணவு கொடுக்கும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
செல்லப்பிராணிகள், கால்நடை வளர்ப்பை பெருமையாக கொண்டுள்ள தோனிக்கு விலங்குகள் மீது அவர் காட்டும் அன்பை எடுத்துக்காட்டுகிறது. தற்போது 42 வயதாகும் தோனி ஷெட்லாண்ட் போனியாக இருக்கும் சேட்டாக் என்ற அற்புதமான கருப்பு ஸ்டாலியனில் தொடங்கி குறிப்பிடத்தக்க விலங்குகளை வைத்திருக்கிறார். மேலும், பெல்ஜியன் மாலினோயிஸ், ஒயிட் ஹஸ்கிஸ் மற்றும் டச்சு ஷெப்பர்ட் போன்ற வகையான நாய்களையும் தோனி தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.
தன்னை கிரிக்கெட் வீரனாக்கிய குழந்தைப்பருவ ஆசானை நினைவு கூர்ந்த சச்சின் டெண்டுல்கர்!
கடந்த 2023 ஐபிஎல் சீசனில் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5ஆவது முறையாக டிராபியை வென்று கொடுத்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஆயத்தமாகி வருகிறார்.
