IND vs AUS 5th T20I: ஏமாற்றிய ரிங்கு, அதிரடி காட்சிய ஷ்ரேயாஸ், ஜித்தேஷ் சர்மா – இந்தியா 160 ரன்கள் குவிப்பு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்துள்ளது.
Shreyas Iyer
இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணியானது டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. இதில், நடந்து முடிந்த 4 போட்டிகளின்படி இந்தியா 3-1 என்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.
Ruturaj Gaikwad
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தொடரானது தற்போது பெங்களூரு மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Shreyas Iyer
இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், 1 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் குவித்து விராட் கோலியின் (231 ரன்கள்) சாதனையை முறியடிப்பார் என்று பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 10 ரன்களில் ஆட்டமிழந்து இருதரப்பு டி20 தொடரில் 223 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த 3ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
IND vs AUS Final T20 Match
இவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு ரிங்கு சிங் 6 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 9.1 ஓவர்களில் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Jitesh Sharma
ஜித்தேஷ் சர்மா 16 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அக்ஷர் படேல் ஓரளவு கை கொடுத்தார். அவர், 21 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 31 ரன்கள் சேர்த்தார்.
India vs Australia5th T20I
கடைசி வரை அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் சிக்ஸ் அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஆனால், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ரவி பிஷ்னோய் 2, அர்ஷ்தீப் சிங் 2 ரன்கள் எடுக்கவே இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்தது.