எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறாரா? வைரலாகும் சிஎஸ்கே வீடியோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் தோனிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஓ கேப்டன், மை கேப்டன் என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து தான் சில ஆண்டுகளாக பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வந்தனர். தோனி கூட, இந்த ஆண்டு ஓய்வு பெறுவேன், அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவேன், சென்னை சேப்பாக்கம் மைதானம் தான் தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று அவரே கூறியிருந்தார்.
கடைசி வரை போராடி சாதனையை கோட்டை விட்ட முகமது அத்னான் கான்: சேப்பாக்கம் எளிதில் வெற்றி!
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் கூட கிரிக்கெட் வர்ணனையாளர் தோனியிடம் இதுதான் உங்களது கடைசி சீசன் எப்படி உணர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தோனியோ நீங்களே முடிவு பண்ணீட்டீங்களா என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அதன் பிறகு இல்லை இல்லை தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்று கூறினார்.
ரூம் கிடைக்காமல் 3 மணி நேரமாக காத்திருந்த இலங்கை வீரர்கள்!
இவ்வளவு ஏன், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சிஎஸ்கே அணி டைட்டில் சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து பேசிய தோனி, இன்னும் 9 மாதங்கள் இருக்கிறது. எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும். மேலும், எப்போதும் சென்னை அணியில் தான் இருப்பேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தோனிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக சிஎஸ்கே தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதற்கு ஓ கேப்டன் மை கேப்டன் என்று தோனி தொடர்பான வீடியோவை பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.