கடைசி வரை போராடி சாதனையை கோட்டை விட்ட முகமது அத்னான் கான்: சேப்பாக்கம் எளிதில் வெற்றி!

சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Chepauk Super Gillies won by 52 runs difference against Salem Spartans in TNPL 2023 at SNR College Cricket Ground, Coimbatore

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் நேற்று கோயம்புத்தூரில் தொடங்கியது. இதில், டிஎன்பிஎல் 2023 தொடரின் 7ஆவது சீசனின் முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரூம் கிடைக்காமல் 3 மணி நேரமாக காத்திருந்த இலங்கை வீரர்கள்!

இதைத் தொடர்ந்து தற்போது டிஎன்பிஎல் தொடரின் 2ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பிரதோஷ் ஃபால் மற்றும் ஜெகதீசன் இருவரும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் குவித்தது.

சுத்தி சுத்தி அடிச்ச பிரதோஷ் ஃபால்; டிஎன்பிஎல் தொடரில் 2ஆவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த சேப்பாக்கம்!

தொடக்க வீரராக களமிறங்கிய பிரதோஷ் ஃபால் அதிரடியாக ஆடிய 55 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 88 ரன்கள் எடுத்து, 12 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். ஜெகதீசன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் பாபா அபாரஜித் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சஞ்சய் யாதவ் கடைசி வரை நின்று 31 ரன்கள் எடுத்தார்.

 

 

கடைசி ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுத்தார். அபிஷேக் தன்வார் வீசிய அந்த ஓவரில் மட்டும் அவர் 4 நோபால் மற்றும் ஒரு வைடு உள்பட 4 ஓவர்கள் வீசி 44 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும், ஒரு விக்கெட் கைப்பற்றினார். இப்போ முடியும், அப்போ முடியும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த ஓவரில் மட்டும் 11 பந்துகள் வீசியுள்ளார்.

TNPL 2023, SS vs CSG: டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் டீம் பேட்டிங்!

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 217 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலமாக டிஎன்பிஎல் தொடரின் 2ஆவது அதிகபட்ச ஸ்கோரை சேப்பாக்கம் அணி எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிராக நெல்லை ராயல் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து டிஎன்பிஎல் தொடரின் அதிகபட்ச ரன்னை பதிவு செய்துள்ளது.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு தொடக்க வீரர் அமித் சாத்விக் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆகாஷ் சும்ரா 24 ரன்களில் வெளியேறினார். எஸ் அரவிந்த் 17 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசியாக வந்த முகமது அத்னான் கான்15 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்கள் குவித்தார்.

என்னும், அவர் வாஷிங்டன் சுந்தரின் 15 பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்ய தவறிவிட்டார். இறுதியாக சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

TNPL 2023 இன்று நடக்கும் 2ஆவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் பலப்பரீட்சை!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:

பாபா அபரஜித் (கேப்டன்), நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ராஜகோபால் சதீஷ், உதிரசாமி சசிதேவ், பிரதோஷ் பால், எம் விஜூ அருள், எஸ் ஹரிஷ் குமார், சஞ்சய் யாதவ், ராமலிங்கம் ரோகித், ராஹில் ஷா, எம். சிலம்பரசன்

சேலம் ஸ்பார்டன்ஸ்:

கௌசிக் காந்தி (கேப்டன்), எஸ் அபிஷேக், ஆர் எஸ் மோகித் ஹரிஹரன், அமித் சாத்விக் (விக்கெட் கீப்பர்), மான் கே ஃபாப்னா, சன்னி சந்து, அபிஷேக் தன்வர், முகமது அத்னான் கான், சச்சின் ரதி, எம் கணேஷ் மூர்த்தி, ஆகாஷ் சும்ரா,

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதிப் போட்டியில் இடம் பெறும் 2 அணிகளுக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios