Asianet News TamilAsianet News Tamil

IND vs AUS Final: பாதுகாப்பு பணியில் 23 டிஜிபி, 4 மூத்த ஐபிஎஸ், ஐஜி, டிஐஜி அதிகாரி உள்ளிட்ட 6000 போலீசார்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடக்க உள்ள நிலையில், 23 டிஜிபி, 4 மூத்த ஐபிஎஸ், ஐஜி, டிஐஜி, 39 காவல் உதவி ஆணையர் உள்பட 6000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

More than 6000 security personnel have been deployed for security as the IND vs AUS World Cup Final Match take place at the Narendra Modi Stadium rsk
Author
First Published Nov 19, 2023, 8:42 AM IST | Last Updated Nov 19, 2023, 8:42 AM IST

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த காத்திருந்த அந்த ஒரு நாள் இன்று வந்துவிட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் யார் அந்த சாம்பியன் என்பதை தெரிந்து கொள்வதற்கான தருணம் இன்று. இந்தியாவில் நடந்து வந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது 46 நாட்களுக்கு பிறகு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி, ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது.

IND vs AUS: உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற கோயில்களில் சிறப்பு பூஜை, யாகம் வளர்த்து ரசிகர்கள் வேண்டுதல்!

இதில், ஆஸ்திரேலியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தான் 20 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதுவரையில் நடந்த 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு இறுதிப் போட்டி உள்பட 10 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு கம்பீரமாக நுழைந்துள்ளது. இந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைக்கும். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து படைத்துள்ளது.

இரவு முழுவதும் காத்திருந்த ஃபேன்ஸ் – காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா? என்ன செய்யப் போகிறது டீம் இந்தியா?

இந்தப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், தான் நரேந்திர மோடி மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயரால் போட்டியை மாற்ற முடியும் – கவுதம் காம்பீர்!

இதில், 6000க்கும் அதிகமான பாதுகாப்பு பணியாளர்கள், 4 மூத்த ஐபிஎஸ், ஐஜி, டிஐஜி, 23 டிஜிபி, 39 காவல் துணை ஆணையர், என்.டிஆர்.எஃப் அதிகாரிகள், 92 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இறுதிப் போட்டி குறித்து காவல்நிலையத்திற்கு மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IND vs AUS Final: நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இசை மற்றும் நடன நிகழ்ச்சியின் ஒத்திகை – வைரலாகும் வீடியோ!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios