இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடக்க உள்ள நிலையில், ரசிகர்கள் நேற்று இரவே மைதானத்திற்கு வந்துள்ளனர்.

இந்தியாவில் நடந்து வந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது இன்று நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியுடன் நிறைவு பெறுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் உலகக் கோப்பை வின்னிங் கேப்டன்களின் அணிவகுப்பு, விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. மேலும், இசை மற்றும் நடன நிகழ்ச்சியுடன் நடக்க இருக்கிறது.

IND vs AUS Final: நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இசை மற்றும் நடன நிகழ்ச்சியின் ஒத்திகை – வைரலாகும் வீடியோ!

Scroll to load tweet…

இந்தப் போட்டியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆஸ்திரேலியா துணை பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பரிதாபமாக 2ஆவது இடம் பிடித்தது.

ஷ்ரேயாஸ் ஐயரால் போட்டியை மாற்ற முடியும் – கவுதம் காம்பீர்!

இதையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை பழி தீர்த்துக் கொள்ள இந்திய அணிக்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில், நேற்று இரவே ரசிகர்கள் மைதானத்திற்கு வந்துள்ளனர்.

உலகக் கோப்பையில் சாதனை: ராஜ வாழ்க்கை வாழும் ஷமி: சொத்து மட்டும் ரூ. 47 கோடி, கார் கலெக்‌ஷன் வேறு!

மிகவும் முக்கியமான போட்டி என்பதால், ஹோட்டல்களில் கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்தும், ஹோட்டல்கள் கிடைக்காத நிலையிலும் ரசிகர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது சும்மா டிரைலர் தான் இனிமேல் தான் மெயின் பிக்‌ஷரே இருக்கு என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் வருகை இருந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…