உலகக் கோப்பையில் சாதனை: ராஜ வாழ்க்கை வாழும் ஷமி: சொத்து மட்டும் ரூ. 47 கோடி, கார் கலெக்‌ஷன் வேறு!

உலகக் கோப்பையில் 10 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை மேல் சாதனை படைத்து வரும் முகமது ஷமியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.47 கோடி ஆகும்.

Indian Fast Bowler Mohammed Shami's net worth alone is Rs 47 crore rsk

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன் பிறகு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலிருந்து முகமது ஷமிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

IND vs AUS Final: இந்திய அணிக்கு வலிமை சேர்க்கும் ரோகித், கோலி, ஷமி – டீம் இந்தியாவின் பலம், பலவீனம் என்ன?

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷமி, இந்தப் போட்டியை விட்டால் இனி வாய்ப்பு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற நிலையில், சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி தன்னை அணியில் நிலைநிறுத்திக் கொண்டார். அதன் பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்து வந்தார். கடைசியாக நடந்த நியூசிலாந்திற்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார்.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முகமது ஷமி 8 சாதனைகளை படைத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 51 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

முகமது ஷமியின் சொந்த கிராமத்தில் மினி கிரிக்கெட் மைதானம், உடற்பயிற்சி கூடம் கட்ட உபி அரசு முடிவு!

இத்தனை சாதனைகளை படைத்த முகமது ஷமியின் சொத்து மட்டும் எவ்வளவு தெரியுமா? ரூ.47 கோடி. வருடத்திற்கு ரூ.7 கோடி ரூபாய் வரையில் வருமானம் ஈட்டுகிறார். மேலும், பிசிசிஐயிடம் சம்பளமாக மட்டும் ரூ.5 கோடி பெறுகிறார். பிராண்ட் அம்பாசிட்டர் மூலமாகவும் வருடத்திற்கு ரூ.2 கோடி வரையில் சம்பாதிக்கிறார். இவ்வளவு ஏன், ஐபிஎல் போட்டிகள் மூலமாக ஆண்டுதோறும் ரூ.6.5 கோடி வரையில் வருமானம் பெறுகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா என்ற பகுதியில் ரூ.15 கோடியில் பிரம்மாண்டமான பண்ணை வீடு ஒன்றும் கட்டியிருக்கிறார். இதில், பவுலிங் பயிற்சி செய்வதற்காக கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டியிருக்கிறார்.

IND vs AUS World Cup Final: உலகக் கோப்பை வின்னிங் கேப்டன்களுக்கு ஸ்பெஷல் பிளேஸர் Blazers வழங்க ஏற்பாடு!

மேலும், அலிநகர் பகுதியில் சொகுசு வீடு ஒன்றும் உள்ளது. இவரது கார் கலெக்‌ஷனில் ஆடி, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜாக்குவார் எஃப் வகை கார்கள் என்று ஏராளமான கார்களை வைத்துள்ளார். ஷமி, Blitzpools, OctaFX மற்றும் Nike ஆகியவற்றிற்கு பிராண்ட் அம்பாசிட்டராக உள்ளார்.

IND vs AUS Final: 2003 vs 2023 World Cup Final: ஒரே மாதிரியாக நடக்கும் சம்பவங்கள் – இந்தியாவின் வெற்றி உறுதி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios