உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நரேந்திர மோடி மைதானத்தில் ஒத்திகை அரங்கேற்றப்பட்டது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முக்கியமான போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. ஒட்டு மொத்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்த ஒரு நாள் இன்று வந்துவிட்டது. உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2ஆவது முறையாக மோதுகின்றன. இதில், இந்திய அணி ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
ஷ்ரேயாஸ் ஐயரால் போட்டியை மாற்ற முடியும் – கவுதம் காம்பீர்!
இன்று நடக்கும் போட்டியில் உலகக் கோப்பை வின்னிங் கேப்டன்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும், விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆஸ்திரேலியா துணை பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உலகக் கோப்பையில் சாதனை: ராஜ வாழ்க்கை வாழும் ஷமி: சொத்து மட்டும் ரூ. 47 கோடி, கார் கலெக்ஷன் வேறு!
இந்த நிலையில் முதல் போட்டி முடிந்த பிறகு பிரபல பின்னணி பாடகரும், பாடலாசிரியருமான ஆதித்யா கத்வியின் இசை நிகழ்ச்சி அரங்கேற இருக்கிறது. இதில், இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான ப்ரீதம் சக்ரவர்த்தி, கனடா பின்னணி பாடகி ஜோனிதா காந்தி, இசையமைப்பாளர் மற்றும் பாடகர் நாகேஷ் ஆசிஸ், இந்திய பாடகர் மற்றும் பாடலாசிரியரான அமித் மிஸ்ரா, பாடகர் மற்றும் கலைஞரான ஆகாஷா சிங், பாடகர் துஷார் ஜோஷி ஆகியோரது இசை நிகழ்ச்சியும் இந்தப் போட்டிக்கு இடையில் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக நேற்று அகமதாபாத் மைதானத்தில் ஒத்திகை அரங்கேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடக்கும் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதோடு, யாகம் வளர்த்தும் ரசிகர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.
முகமது ஷமியின் சொந்த கிராமத்தில் மினி கிரிக்கெட் மைதானம், உடற்பயிற்சி கூடம் கட்ட உபி அரசு முடிவு!
