Asianet News TamilAsianet News Tamil

India vs Sri Lanka: தட்டி தூக்கிய பும்ரா, சிராஜ் – 2 ஓவரிலும் முதல் பந்திலேயே விக்கெட்; தத்தளிக்கும் இலங்கை!

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்களான பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் 2 ஓவரிலும் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

Mohammed Siraj and Jasprit Bumrah Brillant bowling against Sri Lanka and they are take wickets continuouly rsk
Author
First Published Nov 2, 2023, 7:21 PM IST | Last Updated Nov 2, 2023, 7:21 PM IST

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உலகக் கோப்பையின் 33ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இலங்கை அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும். இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 189 ரன்கள் குவித்தது.

India vs Sri Lanka: கில், கோலி பொறுப்பான ஆட்டம்; ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியால் இந்தியா ரன்கள் குவிப்பு!

சுப்மன் கில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியும் 88 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஜோடி 4ஆவது விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுக்க கேஎல் ராகுல் 21, சூர்யகுமார் யாதவ் 12, ரவீந்திர ஜடேஜா 35 ரன்கள் எடுக்க இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.

ரிஸ்க் எடுக்காத சுப்மன் கில் - சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 92 ரன்களில் அவுட்!

கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே ஜஸ்ப்ரித் பும்ரா அதிர்ச்சி கொடுத்தார். முதல் பந்திலேயே பதும் நிசாங்காவை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பிறகு 2ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்திலேயே திமுத் கருணாரத்னே விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் எடுத்தார். அதே ஓவரில் சதீரா சமரவிக்ரமாவையும் ஆட்டமிழக்கச் செய்தார்.

IND vs SL: எனக்கு ஒன்னும் தெரியாது, நீங்களே பார்த்துக் கோங்க: கிரிக்கெட் வர்ணனை செய்த நீயா நானா கோபிநாத்!

இதையடுத்து மீண்டும் சிராஜ் தனது 2ஆவது ஓவரில் முதல் பந்திலேயே இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸை கிளீன் போல்டாக்கினார். இதன் மூலமாக இலங்கை அணி 4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. சிராஜ் 3 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

50 ஆண்டுகால வாழ்க்கைக்காக அர்ப்பணிக்கப்பட்ட சச்சின் சிலை – வான்கடே ஸ்டேடியத்தில் திறந்து வைத்த முதல்வர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios