India vs Sri Lanka: கில், கோலி பொறுப்பான ஆட்டம்; ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியால் இந்தியா ரன்கள் குவிப்பு!

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பையின் 33ஆவது லீக் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 357 ரன்கள் குவித்துள்ளது.

India Scored 357 Runs against Sri Lanka in 33rd Match of World Cup 2023 at Wankhede Stadium rsk

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

ரிஸ்க் எடுக்காத சுப்மன் கில் - சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 92 ரன்களில் அவுட்!

இந்தப் போட்டியில் விராட் கோலி உலகக் கோப்பையில் 12ஆவது அரைசதம் அடித்தார். இதே போன்று சுப்மன் கில் 2ஆது அரைசதம் அடித்தார். இதையடுத்து இருவரும் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டனர். சுப்மன் கில் 92 பந்துகளில் 11 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உள்பட 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதே போன்று விராட் கோலி 94 பந்துகளில் 11 பவுண்டரி உள்பட 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

IND vs SL: எனக்கு ஒன்னும் தெரியாது, நீங்களே பார்த்துக் கோங்க: கிரிக்கெட் வர்ணனை செய்த நீயா நானா கோபிநாத்!

இதன் மூலமாக, விராட் கோலி தனது 49ஆவது சதத்தை கோட்டைவிட்டார். பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். ராகுல் 21 ரன்களில் வெளியேறினார்.       அதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் 2 பவுண்டரிகள் உடன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர்.

சொந்த மண்ணில் ஜாம்பவான் முன்னாடி சொற்ப ரன்களில் வெளியேறிய ரோகித் சர்மா!

ஒரு புறம் அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பையில் 2ஆவது அரைசதம் அடித்தார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 56 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்ஸர்கள் உள்பட 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசியாக ரவீந்திர ஜடேஜா 24 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கவே இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.

50 ஆண்டுகால வாழ்க்கைக்காக அர்ப்பணிக்கப்பட்ட சச்சின் சிலை – வான்கடே ஸ்டேடியத்தில் திறந்து வைத்த முதல்வர்!

இதன் மூலமாக முதல் முறையாக இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இலங்கை அணியில் பவுலிங்கை பொறுத்த வரையில் தில்ஷன் மதுஷங்கா 10 ஓவர்களில் 80 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். துஷ்மந்தா சமீரா 10 ஓவர்களில் 2 மெய்டன் உள்பட 71 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இந்தியா ஜெயித்தால் அரையிறுதிக்கு முன்னேறும் – டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios