ஆசிய கோப்பையிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு மாற்று வீரர் அறிவிப்பு
காயம் காரணமாக ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து விலகிய நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு மாற்று வீரராக முகமது ஹஸ்னைன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி. 22 வயதே ஆன ஷாஹீன் அஃப்ரிடி, பாகிஸ்தான் அணியின் முன்னணி மற்றும் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக வளர்ந்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 25 டெஸ்ட், 32 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் ஆடி முறையே 99, 62 மற்றும் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க - IND vs PAK: ஃபார்மில் இல்லைனாலும் கோலி செம கெத்துதான்..! உஷார்.. பாகிஸ்தானை எச்சரிக்கும் யாசிர் ஷா
கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் முக்கியமான பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோரை விரைவில் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தவர் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி. அவர் தான் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இந்நிலையில், காயம் காரணமாக அவர் ஆசிய கோப்பையில் ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு. குறிப்பாக இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஷாஹீன் அஃப்ரிடியை கண்டிப்பாக மிஸ் செய்யும். அதுவும் ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதும் என்பதால் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஷாஹீன் அஃப்ரிடி இல்லாதது பாகிஸ்தானை பாதிக்கும்.
இதையும் படிங்க - சாஹலுடன் மண முறிவா..? கடும் சர்ச்சைக்கு மத்தியில் மௌனம் கலைத்த தனஸ்ரீ வெர்மா
இந்நிலையில், ஷாஹீன் அஃப்ரிடிக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஷாஹீனுக்கு மாற்று வீரராக 22 வயது இளம் வலது கை ஃபாஸ்ட் பவுலர் முகமது ஹஸ்னைன் சேர்க்கப்பட்டுள்ளார்.
முகமது ஹஸ்னைன் பாகிஸ்தான் அணிக்காக 8 ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் ஆடி முறையே 12 மற்றும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.