சாஹலுடன் மண முறிவா..? கடும் சர்ச்சைக்கு மத்தியில் மௌனம் கலைத்த தனஸ்ரீ வெர்மா
சாஹலுக்கும் அவரது மனைவி தனஸ்ரீ வெர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்ற கருத்து சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்து மௌனம் கலைத்துள்ளார் தனஸ்ரீ வெர்மா.
இந்திய அணியின் சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல். இந்தியாவிற்காக 67 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் ஆடியுள்ள யுஸ்வேந்திர சாஹல் முறையே 118 மற்றும் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல் நடன கலைஞரும், யூடியூப் பிரபலமுமான தனஸ்ரீ வெர்மா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2020 டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். தனஸ்ரீ வெர்மா, சாஹல் ஆடும் போட்டிகளை காண தவறாது சென்றுவிடுவார். இந்தியாவிற்காகவோ அல்லது ஐபிஎல்லிலோ, எந்த போட்டியில் ஆடினாலும் நேரில் சென்று சாஹலை உற்சாகப்படுத்துவார்.
இதையும் படிங்க - Asia Cup 2022: இந்திய அணியை நக்கலடித்த வக்கார் யூனிஸுக்கு தரமான பதிலடி கொடுத்து மூக்கை உடைத்த இர்ஃபான் பதான்
இப்படியாக இருவரும் பரஸ்பரம் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நிலையில், அண்மையில் தனஸ்ரீ வெர்மா, இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த சாஹல் பெயரை நீக்கிவிட்டார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. யுஸ்வேந்திர சாஹலும், புதிய வாழ்வில் அடியெடுத்து வைப்பதாக தெரிவித்திருந்தார். அதனால் இருவரும் பிரியவுள்ளதாக நெட்டிசன்கள் கருத்துகளை கூற, இந்த டாபிக் சமூக வலைதளங்களில் பரபரப்பானது.
இதையடுத்து, இதுகுறித்து இன்ஸ்டாகிராமில், “எங்கள் உறவு குறித்த எந்தவிதமான வதந்தியையும் பரப்பவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள் என்று சாஹல் பதிவிட்டு தெளிவுபடுத்தியிருந்தார்.
இதையும் படிங்க - ZIM vs IND: இவங்க 2 பேருக்கும் ஆட சான்ஸ் கொடுக்கலைனா அது ரொம்ப அநியாயம்..! ஏகப்பட்ட மாற்றங்கள்..?
இந்நிலையில், இந்த விஷயத்தில் தற்போது தனஸ்ரீ வெர்மாவும் மௌனம் கலைத்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள தனஸ்ரீ வெர்மா, நடனம் ஆடும்போது காலில் காயம் ஏற்பட்டது. அதனால் வீட்டில் 2 வாரமாக ஓய்வில் இருக்கிறேன். என் வீட்டில் என் கணவர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் என்னை நன்றாக கவனித்துக்கொள்கின்றனர். இந்த காயத்திலிருந்து விரைவில் மீண்டு வருவேன். ஆதாரமில்லாமல் பரப்பப்படும் வதந்திகளிலிருந்தும் மீண்டு வருவேன். மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பரப்புங்கள். மற்றவற்றை தவிருங்கள் என்று தனஸ்ரீ வெர்மா கூறியுள்ளார்.