Asia Cup 2022: இந்திய அணியை நக்கலடித்த வக்கார் யூனிஸுக்கு தரமான பதிலடி கொடுத்து மூக்கை உடைத்த இர்ஃபான் பதான்
ஆசிய கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடி ஆடாததை வைத்து இந்திய அணியை எளக்காரமாக பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் இர்ஃபான் பதான்.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி. 22 வயதே ஆன ஷாஹீன் அஃப்ரிடி, பாகிஸ்தான் அணியின் முன்னணி மற்றும் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக வளர்ந்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 25 டெஸ்ட், 32 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் ஆடி முறையே 99, 62 மற்றும் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் முக்கியமான பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோரை விரைவில் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தவர் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி. அவர் தான் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இதையும் படிங்க - ZIM vs IND: இவங்க 2 பேருக்கும் ஆட சான்ஸ் கொடுக்கலைனா அது ரொம்ப அநியாயம்..! ஏகப்பட்ட மாற்றங்கள்..?
இந்நிலையில், காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி ஆடவில்லை. ஷாஹீன் அஃப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாகவே அமையும் என்பது உண்மைதான்.
ஆனால் ஷாஹீன் அஃப்ரிடி ஆடாததை வைத்து இந்திய அணியை எளக்காரமாக பேசினார் பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் வக்கார் யூனிஸ். இதுகுறித்து டுவீட் செய்த வக்கார் யூனிஸ், ஷாஹீன் அஃப்ரிடி காயமடைந்தது இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்குத்தான் பெரும் நிம்மதியாக இருக்கும் என்று பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க - ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர் வெற்றிகள்.. வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி
அதைக்கண்டு செம கடுப்படைந்த இர்ஃபான் பதான், பும்ரா, ஹர்ஷல் படேல் ஆசிய கோப்பையில் ஆடாதது எதிரணிகளுக்கு பெரும் நிம்மதியாக இருக்கும் என்று வக்கார் யூனிஸுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஷாஹீன் அஃப்ரிடி எப்படியோ, இந்தியாவிற்கு பும்ரா அதைவிட பன்மடங்கு முக்கியமான வீரர். அவரும் தான் ஆசிய கோப்பையில் ஆடவில்லை. எனவே அது பாகிஸ்தானுக்கும் நிம்மதிதான். ஆனால் எத்தனை வீரர்கள் காயத்தால் ஆடமுடியாமல் போனாலும், அவர்களுக்கு மாற்று வீரர்களை இந்தியா தயாராக வைத்திருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் நிலை அப்படியில்லை.