Asianet News TamilAsianet News Tamil

பிறந்தநாளன்று சதம் விளாசி மிட்செல் மார்ஷ் சாதனை – பாகிஸ்தான் பவுலர்களுக்கு 9 சிக்ஸர், 10 பவுண்டரி டிரீட்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக பிறந்தநாளன்று சதம் விளாசியவர்களின் பட்டியலில் மிட்செல் மார்ஷ் இணைந்துள்ளார்.

Mitchell Marsh hit a century on his birthday during AUS vs PAK at M.Chinnaswamy Stadium, Bengaluru rsk
Author
First Published Oct 20, 2023, 7:12 PM IST | Last Updated Oct 20, 2023, 7:12 PM IST

கிரிக்கெட் உலகக் கோப்பையின் 18ஆவது லீக் போட்டி இன்று பெங்களூருவில் உள்ள சின்னஸ்வாமி மைதானத்தில் நடந்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

பாகிஸ்தானை பந்தாடி 18 சிக்ஸர், 24 பவுண்டரி விளாசிய வார்னர் – மார்ஷ் ஜோடி – ஆஸ்திரேலியா 367 ரன்கள் குவிப்பு!

Mitchell Marsh hit a century on his birthday during AUS vs PAK at M.Chinnaswamy Stadium, Bengaluru rsk

இதில், மிட்செல் மார்ஷ் இன்று தனது 32ssஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தொடக்க முதலே இருவரும் நிதானமாகவும், பொறுமையாகவும் விளையாடி வந்தனர். முதல் 10 ஓவர்களில் இந்த ஜோடி 82 ரன்கள் குவித்தது. இதில், டேவிட் வார்னர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தானின் உசாமா மிர் கோட்டைவிட்டார். அப்போது வார்னர் 10 ரன்கள் எடுத்திருந்தார்.

Australia vs Pakistan: சிக்ஸர் மழை பொழிந்த வார்னர் – பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 4 முறை சதம் விளாசி சாதனை!

அதன் பிறகு இருவரும் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி சதம் விளாசினர். வார்னர் 85 பந்துகளில் சதம் விளாசி பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 4ஆவது சதம் அடித்து சாதனை படைத்தார். மேலும், ஒரு தொடக்க வீரராக 47 சதங்கள் விளாசியுள்ளார். வார்னரைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் சதம் விளாசி சாதனை படைத்தார். பிறந்தநாளன்று சதம் விளாசி சாதனை படைத்தவர்களின் பட்டியலில் மிட்செல் மார்ஷும் இணைந்துள்ளார்.

மார்ஷ் 100 பந்துகளில் 100 ரன்கள் குவித்து தனது பிறந்தநாள் பரிசாக அனைவருக்கும் கொடுத்துள்ளார்.

பிறந்தநாளன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்தவர்கள்:

140* - டாம் லாதம் vs நெதர்லாந்த், ஹாமில்டன், 2022 (30th b’day)

134 – சச்சின் டெண்டுல்கர் vs ஆஸ்திரேலியா, ஷார்ஜா, 1998 (25th)

131* - ராஸ் டெய்லர் vs பாகிஸ்தான், பல்லேகலே, 2011 (27th)

130 – சனத் ஜெயசூர்யா vs வங்கதேசம், கராச்சி, 2008 (39th)

100* - வினோத் காம்ப்ளி vs இங்கிலாந்து, ஜெய்ப்பூர் 1993 (21st)

101* - மிட்செல் மார்ஷ் vs பாகிஸ்தான், பெங்களூரு, 2023 (32nd)

ராஸ் டெய்லரைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பிறந்தநாளன்று சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை மிட்செல் மார்ஷ் படைத்துள்ளார். தொடர்ந்து விளையாடிய மார்ஷ் 108 பந்துகளில் 10 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உள்பட 121 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல் – புதிய சிக்கலில் டீம் இந்தியா!

Mitchell Marsh hit a century on his birthday during AUS vs PAK at M.Chinnaswamy Stadium, Bengaluru rsk

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios