Australia vs Pakistan: சிக்ஸர் மழை பொழிந்த வார்னர் – பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 4 முறை சதம் விளாசி சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிராக தற்போது நடந்து வரும் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் வார்னர் சதம் விளாசி பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 4 முறை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
பெங்களுரூ சின்னச்சாமி மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 18ஆவது கிரிக்கெட் லீக் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி டேவிட் வார்னர் மற்று மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கி நிதானமாக தொடங்கி பின்னர் அதிரடியாக விளையாடினர். இருவரும் மாறி மாறி அரைசதம் அடித்து அதன் பிறகு சதமும் விளாசினர்.
இந்த நிலையில் தான் டேவிட் வார்னர் 85 பந்துகளில் சதம் விளாசி தொடர்ந்து 4 முறை பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக டேவிட் வார்னர் (2017 – 2023 வரையில்)
130(119), சிட்னி, 2017
179(128), அடிலெய்டு, 2017
107(111), டாண்டன், கிரிக்கெட் உலகக் கோப்பை 2019
100*(85), பெங்களுரு, 2023 – 124 பந்துகளில் 163 ரன்கள் (14 பவுண்டரி, 9 சிக்ஸர்)
இதற்கு முன்னதாக இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி தொடர்ந்து 4 முறை சதம் (2017 -18) விளாசியிருந்தார்.
மேலும், உலகக் கோப்பையில் அதிக முறை சதம் விளாசியவர்களின் பட்டியலிலும் இணைந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியதன் மூலமாக உலகக் கோப்பையில் 5ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக உலகக் கோப்பையில் சதம் விளாசியவர்கள்:
ரோகித் சர்மா – 7
சச்சின் டெண்டுல்கர் – 6
ரிக்கி பாண்டிங் – 5
குமார் சங்கக்காரா – 5
டேவிட் வார்னர் – 5
இன்றைய போட்டியில் தொடக்க வீரர்கள் இருவரும் சதம் விளாசியதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் சதம் விளாசியவர்கள் பட்டியலில் வார்னர் மற்றும் மார்ஷ் இணைந்துள்ளனர்.
உபுல் தராங்கா – திலகரத்னே தில்ஷன் (இலங்கை) vs ஜிம்பாப்வே, பல்லேகலே, 2011
உபுல் தராங்கா – திலகரத்னே தில்ஷன் (இலங்கை) vs இங்கிலாந்து, கொழும்பு, 2011 உலகக் கோப்பை கால் இறுதிப் போட்டி
ரோகித் சர்மா and கேஎல் ராகுல் (இந்தியா) vs இலங்கை, லீட்ஸ், 2019
டேவிட் வார்னர் and மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) vs பாகிஸ்தான், பெங்களூரு , 2023
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்த வீரர்கள்:
372 – கிறிஸ் கெயில் – மார்லன் சாமுவேல்ஸ் (வெஸ் இண்டீஸ்) vs ஜிம்பாப்வே, கான்பெர்ரா, 2015
318 – சவுரவ் கங்குலி - ராகுல் டிராவிட் (இந்தியா) vs இலங்கை, டாண்டன், 1999
282 – திலகரத்னே தில்ஷன் – உபுல் தரங்கா (இலங்கை) vs ஜிம்பாப்வே, பல்லேகலே, 2011
273* - டெவான் கான்வே – ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) vs இங்கிலாந்து, அகமதாபாத், 2023
260 – டேவிட் வார்னர் – ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) vs ஆப்கானிஸ்தான், பெர்த், 2015
259 – மிட்செல் மார்ஷ் – டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) vs பாகிஸ்தான், பெங்களூரு, 2023
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இணைந்து தொடக்க வீரர்களாக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துள்ள்னர். இதற்கு முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தில்ஷன் மற்றும் தரங்கா இருவரும் 282 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- AUS vs PAK
- AUS vs PAK Live
- AUS vs PAK Live Match World Cup
- AUS vs PAK Live Streaming
- Australia
- Australia vs Pakistan
- Australia vs Pakistan 18th Match
- Australia vs Pakistan Live
- Australia vs Pakistan World Cup
- Australia vs Pakistan World Cup 18th Match
- Australia vs Pakistan World Cup 2023
- Babar Azam
- Bengaluru
- CWC 2023
- ICC Cricket World Cup 2023
- ICC Cricket World Cup 2023 schedule
- ICC World Cup 2023
- M.Chinnaswamy Stadium
- Pakistan
- Pat Cummins
- Watch AUS vs PAK Live
- World Cup 2023 fixtures
- World Cup AUS vs PAK Venue
- World Cup Cricket Live Scores
- cricket world cup 2023 news
- cricket world cup tickets