வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜா, டைவ் அடித்து கேட்ச் பிடித்ததன் மூலமாக பீல்டிங் பயிற்சியாளரிடம் பக்கம் வேண்டுமென்று கேட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் குவித்தனர். ஒரு நாள் போட்டியில் தன்ஷித் அகமது தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 8 ரன்னிலும், மெஹிடி ஹசன் மிராஸ் 3 ரன்னிலும் லிட்டன் தாஸ் 66 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தவ்ஹீத் ஹிரிடோய் 16 ரன்களில் வெளியேறவே, அடுத்து முஷ்பிகுர் ரஹீம் களமிறங்கினார்.

IND vs BAN: அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டம் காட்டிய வங்கதேச அணி – விக்கெட் எடுக்க போராடிய இந்தியா!

அவர் நிதானமாக் விளையாடி ரன்கள் சேர்த்தார். போட்டியின் 42.3 ஆவது ஓவரில் ஜஸ்ப்ரித் பும்ரா பந்தில் முஷ்பிகுர் ரஹீம் அடித்த பந்தை ஆஃப் சைடு திசையில் நின்றிருந்த ரவீந்திர ஜடேஜா டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். அதோடு, மைதானத்திற்கு வெளியில் நின்றிருந்த பீல்டிங் பயிற்சியாளரிடம் தனக்கு மெடல் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு பீல்டிங் பயிற்சியாளர் கை தட்டி பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலானது. இது ஒரு புறம் இருக்க, பீல்டிங் பயிற்சியாளரிடம் வெளியில் இருந்த நடுவர் அது என்ன கேட்கிறார் என்று கேட்டுள்ளார் இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பார்ட்னர்ஷிப்பில் வங்கதேச அணி புதிய சாதனை!

இதற்கு முன்னதாக முகமது சிராஜ் ஓவரில் மெஹிடி ஹசன் மிராஸிற்கு விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் ஒரு கையால் கேட்ச் பிடித்திருந்தார். ஆகையால், அவருக்கு சிறந்த பீல்டருக்கான பதக்கம் வழங்கப்படுமா அல்லது ஜடேஜாவிற்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…